ரசிக்க ருசிக்க…! ராகி அடை
ராகி அடை தேவையான பொருட்கள் ராகி-200, கோதுமை மாவு-கைப்பிடி அளவு, அரிசி மாவு -1 டேபிள்ஸ்பூன், உப்பு-தேவையான அளவு, பெருங்காயத்தூள்-அரை டீஸ்பூ...
https://pettagum.blogspot.com/2011/05/blog-post_02.html
ராகி அடை
தேவையான பொருட்கள்
ராகி-200, கோதுமை மாவு-கைப்பிடி அளவு, அரிசி மாவு -1 டேபிள்ஸ்பூன், உப்பு-தேவையான அளவு, பெருங்காயத்தூள்-அரை டீஸ்பூன், காஞ்சமிளகாய்-2, வெங்காயம்-2, கடுகு, கறிவேப்பிலை-தேவையான அளவு, உளுத்தம்பருப்பு அல்லது கடலைப்பருப்பு-அரை டீஸ்பூன், எண்ணெய்-2 மேஜைக்கரண்டி.
செய்முறை
ராகி, கோதுமை மாவு, அரிசிமாவுடன் உப்பு சேர்த்து ஒன்றாகக் கலந்து நன்றாக கொதிக்க வைத்த தண்ணீரை ஊற்றிக் கிளற வேண்டும். அப்போது ஒரே ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விடவும். அரை டேபிள்ஸ்பூன் கடுகையும் கடலைப்பருப்பு ஆகியவற்றை தாளித்து அதோடு பெருங்காயம், காஞ்சமிளகாய் போட்டு வதக்கிக் கொள்ளவும். பிறகு கீழே இறக்கி மிளகு, வெங்காயத்தைச் சேர்த்து ஏற்கெனவே கலந்து வைத்த மாவுடன் சேர்த்துக் கிளறவும். அப்படியே பெரிய உருண்டையாக்கி கடாய் அல்லது பெரிய இலை வைத்துத் தட்டி எண்ணெயைத் தொட்டு தடவி அடையை சுட்டுச் சாப்பிடுங்கள் : அடடே! என்று ஆச்சர்யப்படுவீர்கள் ராகி அடையின் சுவையின் மகிமையைக் கண்டு.
Post a Comment