சமையல் குறிப்புகள்! கிச்சிடி சாதம்
கிச்சிடி சாதம் தேவையான பொருட்கள் : அரிசி 2 கோப்பை பயத்தம் பருப்பு 1/2 கோப்பை தேங்காய் - 1/2 கோப்பை கசகசா - 1 தேக்கரண்டி தயிர்- 1 /4 கோப்பை ...
https://pettagum.blogspot.com/2011/04/blog-post_9933.html
கிச்சிடி சாதம்
தேவையான பொருட்கள் :
அரிசி 2 கோப்பை
பயத்தம் பருப்பு 1/2 கோப்பை
தேங்காய் - 1/2 கோப்பை
கசகசா - 1 தேக்கரண்டி
தயிர்- 1 /4 கோப்பை
இஞ்சி பூண்டு விழுது -2 தேக்கரண்டி
தக்காளி - 3
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 4
மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகு தூள் -1/2 தேக்கரண்டி
சீரகத்தூள் - 1/4 தேக்கரண்டி
தனியத்தூள் - 1தேக்கரண்டி
மஞ்சள்தூள் - ஒரு தேக்கரண்டி
சோம்பு - ஒரு தேக்கரண்டி
ஏலக்காய் - 2
பட்டை - 2 சிறு துண்டு
கிராம்பு - 4
நெய் /எண்ணெய் -1/2 கோப்பை
கொத்தமல்லி புதினா -ஒரு கைப்பிடி
உப்பு - 2 தேக்கரண்டி
காய்கறி 1/4கிலோ.( கேரட்,பீன்ஸ், காலிஃபிளவர், பட்டாணி)
செய்முறை :
வெங்காயம் தக்காளி மற்றும் காய்கறிகளை நறுக்கவும்.அரிசி பருப்பை கழூவி ஊறவிடவும்.
தேங்காயுடன் கசகசாவைச் சேர்த்து மைய்ய அரைக்கவும்.
அடிகணமான பாத்திரத்தில் வாசனைப் பொருட்களைப் போட்டு பொரியவிட்டு பின்பு வெங்காயத்தைப் போடவும்.
வெங்காயம் பொன்முறுவலானதும் இஞ்சி பூண்டு விழுதைப் போட்டு நன்கு வதக்கவும்.
பிறகு அதில் மசாலா பொடிகளைப் போட்டு வதக்கவும்
பச்சைவாசனை நீங்கியதும் தக்காளியைப் போட்டு குழைய விடவும்
பிறகு பிடித்தமான காய்கறிகள்,புதினா கொத்தமல்லியைப் போட்டு,
அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை ஊற்றி நன்கு கலக்கவும்.
பிறகு அதில் அரிசிக் கலவையைக் கொட்டி இலேசாக கிளரவும்.
பிறகு அதில் நீரைச் சேர்த்து நன்கு கலக்கவும். ஐந்து கோப்பை நீர் போதுமானது.
எல்லாம் சேர்ந்து நன்கு கொதிக்கும் போது மூடியைப் போட்டு அடுப்பின் அனலைக் குறைக்கவும்.
அரிசி முழுவதுமாக வெந்தவுடன் தயிரைச் சேர்த்து கிளறி சூடாக பரிமாறவும்.
Post a Comment