டிப்ஸ்! கோடையை குளுமையாக்க வித விதமான பானங்கள்!

டிப்ஸ்! கோடையை குளுமையாக்க வித விதமான பானங்கள்! Variety juices for summer! - Tips for Women கறுப்பு திராட்சைப் பழங்களைக் கழுவி சுத்தம் செ...

டிப்ஸ்! கோடையை குளுமையாக்க வித விதமான பானங்கள்! Variety juices for summer! - Tips for Women கறுப்பு திராட்சைப் பழங்களைக் கழுவி சுத்தம் செய்து மிக்ஸியில் போட்டு அல்லது மத்தால் நசுக்கி கரைத்துக் கொள்ளவும். பின்பு அதை மெல்லிய துணியால் வடிகட்டி, தோல், விதை ஆகியவற்றை நீக்கிவிட்டு சாறை மட்டும் எடுத்துக் கொள்ளவும். அத்துடன் சிறிது எலுமிச்சை சாறும் சேர்த்து, சர்க்கரையையும், ஐஸ் கட்டியைச் சிறு துண்டுகளாக்கிப் போட்டு பருகலாம். * இரண்டு தக்காளிப் பழங்களை மிக்ஸியில் விழுதாக அரைத்து, நீர் மோரில் கலந்து ஒரு சிட்டிகை டேபிள் சால்ட், கால் ஸ்பூன் பெருங்காயத் தூள், கொத்துமல்லி இலைகள், கறிவேப்பிலை போட்டு இரண்டு மூன்று கப் குடித்தால் உஷ்ணத்தால் உடல் சோர்ந்து போகாது. களைப்பும் தெரியாது. * வெயிலில் தயிர் புளித்துவிட்டதா? ஒரு கப் புளித்த தயிருடன் 6 ஸ்பூன் சர்க்கரை, ஒரு சிட்டிகை உப்பு, மிக்ஸியில் அடித்து குடித்துப் பாருங்கள். அப்புறம் புளிப்புத் தயிரைத் தேடுவீர்கள். * வெயிலில் வீட்டுக்கு வந்த விருந்தாளிகளுக்கு நுங்குடன் சர்க்கரை அல்லது கன்டென்ஸ்டு மில்க் சேர்த்துப் பொடியாக அரிந்த மாம்பழம், வாழைப்பழம் கலந்து கொடுத்தால் உங்களுக்குப் பாராட்டு நிச்சயம். * புதினா இலைக்கு உடலைக் குளிர்ச்சியடைய வைக்கும் தன்மை உள்ளது. புதினா இலையை நறுக்கி நீரில் போட்டு அந்த நீரைப் பருகலாம். * அதிக தாகம், நாக்கு வறட்சி இருப்பவர்கள் கோடைக் காலத்தில் குளிர்ந்த நீரில் நன்னாரி வேரைப் போட்டு வைத்து பருகி வரலாம். * காலையில் எழுந்தவுடன் ஒரு டம்ளர் தண்ணீரில் எலுமிச்சைப் பழத்தைப் பிழிந்து அதில் ஒரு டீ ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் அந்த நாள் முழுவதும் புத்துணர்ச்சியாக இருக்கும். எலுமிச்சை சாறில் உப்பு சேர்த்து அருந்த மயக்கம், பித்தம், தொண்டை சூடு மாறும். * தர்ப்பூசணி பழச்சாறுடன் சிறிது எலுமிச்சைச் சாறு, கசக்கிய புதினாத் தழைச் சாறு, சர்க்கரை சேர்த்து குடித்தால் வெயிலால் ஏற்படும் உடல் வெம்மை தணியும். * தர்ப்பூசணியில் இனிப்பு சர்பத்துதான் செய்ய வேண்டும் என்பதில்லை. தோல் சீவி மிக்ஸியில் போட்டு புளிக்காத மோர்விட்டு மிளகு, சீரகம் தட்டிப் போட்டுக் குடித்துப் பாருங்கள். சம்மர் முழுக்க விடமாட்டீர்கள்.

Related

ஹெல்த் ஸ்பெஷல் 5703205716565127096

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item