சமையல் குறிப்புகள்! அரைக்கீரை கைமா
அரைக்கீரை கைமா தேவையான பொருட்கள்: பூண்டு - 25 கிராம் மட்டன் - 200 கிராம் அரைக்கீரை - 1 கட்டு வெங்காயம் - 200 கி தக்காளி - 250 கி பச்சைமிளக...
https://pettagum.blogspot.com/2011/04/blog-post_9118.html
அரைக்கீரை கைமா
தேவையான பொருட்கள்:
பூண்டு - 25 கிராம்
மட்டன் - 200 கிராம்
அரைக்கீரை - 1 கட்டு
வெங்காயம் - 200 கி
தக்காளி - 250 கி
பச்சைமிளகாய் - 10 கிராம்
இஞ்சி - 10 கிராம்
மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
தனியாத்தூள் - 3 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
எண்ணெய் - 100 மில்லி
செய்முறை:
வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி ஆகியவற்றை நறுக்கவும். இஞ்சி, பூண்டை அரைத்துக் கொள்ளவும். அரைக்கீரையை கழுவி நறுக்கிக் கொள்ளவும்.
அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி கறிமசாலா மற்றும் சோம்பு சேர்க்கவும். வெங்காயம் சேர்த்து சில நிமிடத்திற்கு நன்கு வதக்கவும். தக்காளி மற்றும் அரைத்த இஞ்சி பூண்டை சேர்த்து வதக்கவும்.
கொத்தித் துண்டாக்கப்பட்ட இறைச்சியை சேர்த்து நன்கு வதக்கி மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் சேர்க்கவும். தனியா பவுடர் சேர்த்து உப்பு சேர்த்து வேக வைக்கவும். பாதி வெந்தவுடன் நறுக்கிய கீரையை சேர்த்து நன்கு கலக்கவும்.
சாதம் சாம்பாருடன் பரிமாறவும். இது கீரை கொத்தின கறி என்று பிரசித்தி பெற்றதாகும்.
Post a Comment