டிப்ஸ்! எளிமையான அழகுக் குறிப்புகள்

அழகுக் குறிப்புகள் தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்துக் குளித்தால் தோல் பளபளப்பாகவும்...

அழகுக் குறிப்புகள்
தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்துக் குளித்தால் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும். -------------------------------------------------------------------------------------------- ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும். ---------------------------------------------------------------------------------------------------- முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும். ----------------------------------------------------------------------------------------------------- பருமனாக இருப்பவர்கள் எடையை குறைக்க தினமும் காலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான வெந்நீரில் ஒரு மூடி எலுமிச்சை பழச்சாற்றை பிழிந்து அதனுடன் அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் எடை குறையும். ------------------------------------------------------------------------------------------------- நகங்களை வெட்டும் முன் எண்ணெயை தடவிவிட்டு, சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டினால், விரும்பும் வடிவத்திலும், அழகாகவும் வெட்ட இயலும். ---------------------------------------------------------------------------------------------------- கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால், கோழி முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை கலந்து தலையில் லேசாக தடவிக்கொண்டு பிறகு தலைக்கு ஊற்ற வேண்டும். இதனால் எண்ணெய் பசை நீங்கி முடி அழகு பெறும். ------------------------------------------------------------------------------------------------------- தேநீரில் வடிகட்டிய பின், மிஞ்சும் தேயிலைத் தூளில் எலுமிச்சை சாறை பிழிந்து, தலையில் தேய்த்துக் குளித்தால், தலைமுடி பளபளப்பாகும். --------------------------------------------------------------------------------------------------------- வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில் குழைத்து, முகத்தில் பூசி, 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகம் வோடிக்குரு வராமல், வெளியில் கறுத்துப் போகாமல் இருக்கும். இளம் சூடான ஒரு லிட்டர் நீரில், இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு, கண்களை கழுவினால் கண்கள் பிரகாசமாக இருக்கும். ------------------------------------------------------------------------------------------------------------- கை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சம்பழ சாற்றை தேய்த்து சோப்பு போட்டு குளிக்க வேண்டும் நாளடைவில் கறுப்பு நிறம் போய் விடும். தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும். ------------------------------------------------------------------------------------- இரவு படுக்கும் முன், புதினா சாறு இரண்டு தேக்கரண்டி, அரை மூடி எலுமிச்சம்பழ சாறு ஆகியவற்றுடன் பயிற்றம்பருப்பு மாவை கலந்து முகத்தில் தடவிக் கொண்டு பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் ஒத்தடம் கொடுக்க முகம் சுத்தமாகும். பருவினால் ஏற்பட்ட தழும்பும் மறையும். ஆப்பிள் பழத்தை சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும். -------------------------------------------------------------------------------------------- முகத்தில் உள்ள முடிகளை அகற்ற, முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைபோல் ஆனதும் முகத்தில் தடவவும். காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதில் வரும். ------------------------------------------------------------------------------------------------ மோரை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால் வறண்ட சருமம் புதுப் பொலிவடையும். ------------------------------------------------------------------------------------------------ பழுத்த வாழைப் பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மிகவும் மிருதுவாகும். ----------------------------------------------------------------------------------------------------- ஆரஞ்சு பழத்தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து பாலுடன் கலந்து சருமத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவி வந்தால், வெயிலில் ஏற்பட்ட கருமை மறையும். -------------------------------------------------------------------------------------------------------- பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும். ----------------------------------------------------------------------------------------------------------- தேங்காய்ப் பாலுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் ஐந்து நிமிடம் மசாஜ் செய்தால் சோர்வடைந்து சருமம் புத்துணர்ச்சி பெறும். --------------------------------------------------------------------------------------------------------------- தக்காளி பழத்தை இரண்டாக நறுக்கி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும். ----------------------------------------------------------------------------------------------------- தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும். ---------------------------------------------------------------------------------------------------------- ஆரஞ்சுப் பழத் தோலை காய வைத்து அதனுடன் பாசிப்பயிறையும் சேர்த்து அரைத்து தினமும் சொப்புக்குப் பதிலாக உபயோகித்து குளித்து வந்தால் சற்று மாநிறமாக இருப்பவர்கள் கூட சிவப்பாக மாறுவார்கள். ------------------------------------------------------------------------------------------------- சிறிதளவு வெண்ணெயுடன் கொஞ்சம் தேன் கலந்து வாரம் ஒரு முறை உடல் முழுவதும் பூசினால் தோல் சொர சொரப்பு தானாகப் போகும். ------------------------------------------------------------------------------------------------------- தேங்காய் எண்ணெயுடன் சிறிது நல்லெண்ணெய், பாதாம் எண்ணெய் கலந்து உடலில் நன்கு தேய்த்தால் தோல் மிருதுவாகும். --------------------------------------------------------------------------------------------------- ஆரஞ்சுப் பழத் தோலை சுமார் ஒரு வாரம் வரை நீரில் ஊற வைத்து அந்த எசென்ஸை பிரிட்ஜில் வைத்து அதை தினமும் தேய்த்துக் குளித்து வந்தால் வியர்வை வாடையே வராது. தோலும் மென்மையாக மாறிவிடும். ----------------------------------------------------------------------------------------------------- பாதாம் பவுடர், ஆலிவ் எண்ணெய், வாழைப்பழம் ஆகியவற்றை கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து குளிர்ந்த பாலில் முகத்தை கழுவி தண்ணீரில் கழுவ வேண்டும். 10 நாட்கள் செய்தால் முகம் தனி அழகு பெறும். ---------------------------------------------------------------------------------------------------- சிறிது வெண்ணெய், பாதாம் பருப்பு ஒன்று, சிறிது எலுமிச்சை சாறு காலந்து நன்கு அரைக்கவும். இதை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவி 20 நிமிடம் ஊற விட வேண்டும். பின்னர் பஞ்சை பாலில் நனைத்து அதை முகத்தைச் சுற்றி தடவி, பின்னர் பன்னீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படித் தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் இரத்த ஓட்டம் சீராகும். ---------------------------------------------------------------------------------------------------- வெள்ளரிக்காயை இடித்து சாறு எடுத்து சிறிது பாலுடன் கலந்து பஞ்சால் நனைத்து முகத்தில் கீழிருந்து மேலாகத் தேய்த்தால் முகத்தில் உள்ள அழுக்குகள் போய் முகம் ஒளி பெறும். ---------------------------------------------------------------------------------------------------------- கை முட்டிகளில் உள்ள கறுப்பு நிறத்தைப் போக்க எலுமிச்சை சாறை தேய்த்து சோப்புப் போட்டுக் குளித்தால் நாளுக்கு நாள் கறுப்பு நிறம் மாறி விடும். ------------------------------------------------------------------------------------- முகம் கழுவும் கிரீமை (பேஸ் வாஸ் கிரீம்-Face wash Cream) முகத்தில் நுரை வரும் அளவிற்கு தேய்த்து பிறகு ஒரு தேக்கரண்டி சர்க்கரையை எடுத்து முகத்தில் மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். இதனால் முகத்தில் உள்ள வெண் புள்ளிகள் (வொயிட் ஹெட்ஸ்), கரும் புள்ளிகள் (பிளாக் ஹெட்ஸ்) எல்லாம் நீங்கி விடும். அதோடு முகத்தில் இருக்கும் நுண் துவாரங்களில் அடைத்திருக்கிற அழுக்கும் வெளியேறி முகம் புத்தொளி பெறும். ------------------------------------------------------------------------------------------ தலைக்கு ஹென்னா நெல்லிக்காய் பொடி, மருதாணி, டீ டிக்காஷன் அனைத்தையும் தண்ணீர் சேர்த்து கலந்து இரும்பு கடாயில் முதல் நாள் இரவே ஊற வைக்க வேண்டும். மறுநாள் இந்த கலவையோடு முட்டையின் வெள்ளைக்கரு, தயிர் சேர்த்து கலந்து தலையில் தேய்த்து இரண்டு மணி நேரம் ஊற வைத்துக் குளிக்க வேண்டும். தயிர் கலப்பதினால் பொடுகு தொல்லை இல்லாமல் இருக்கும். ஹென்னா போடும் நாள் மட்டும் முடிக்கு ஷாம்பு போடாமல் வெறும் தண்ணீரில் அலசினால் தான் அதன் சாரம் தலையில் தங்கும்.

Related

ஹெல்த் ஸ்பெஷல் 7373425639227301102

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item