கைமணம்! புழுங்கலரிசி புட்டு
புழுங்கலரிசி புட்டு தேவையானவை: புழுங்கல் அரிசி -- ஒரு கப், வெல்லம் - முக்கால் கப், நெய், தேங்காய் துருவல், முந்திரி - தலா ஒரு டேபிள்ஸ்பூன்...
https://pettagum.blogspot.com/2011/04/blog-post_851.html
புழுங்கலரிசி புட்டு
தேவையானவை:
புழுங்கல் அரிசி -- ஒரு கப், வெல்லம் - முக்கால் கப், நெய், தேங்காய் துருவல், முந்திரி - தலா ஒரு டேபிள்ஸ்பூன், துவரம் பருப்பு - ஒரு டீஸ்பூன், ஏலக்காய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு - தலா கால் டீஸ்பூன்.
செய்முறை:
அரிசியை சிறிது சிறிதாக வெறும் கடாயில் சிவக்க வறுத்து, ஆறியதும் மிக்ஸியில் ரவையாக பொடித்துக் கொள்ளவும். வெல்லத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து கொதித்ததும், வடிகட்டி கெட்டி பாகாகக் காய்ச்சவும். துவரம்பருப்பை முக்கால் பதத்தில் வேக வைக்கவும். பொடித்த ரவையில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து வெது வெதுப்பான நீர் ஊற்றி பிசறி ஒரு வெள்ளைத் துணியில் மூட்டை கட்டி ஆவியில் வேக விடவும். வெந்ததும் கட்டிகள் இல்லாமல் நன்றாக தேய்த்துக் கொள்ளவும். இத்துடன் வெல்லப்பாகு, துவரம்பருப்பு, சிறிது ஏலக்காய்த்தூள் எல்லாவற்றையும் சேர்த்து தேங்காய் துருவலை லேசாக வறுத்துக் கொட்டவும். நெய்யில் முந்திரியை தாளித்துக் கொட்டி மீதியுள்ள ஏலக்காய்த்தூளையும் சேர்த்துக் கிளறி இறக்கவும். ஆறியதும் உதிர் உதிராகிவிடும்.
Post a Comment