சிறப்பு மிகுந்த சென்னா மசாலா!

சிறப்பு மிகுந்த சென்னா மசாலா! சென்னாவை 8 முதல் 10 மணி நேரம் நீரில் ஊறப்போட்டு, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து, பிரஷர் குக்கரில் 3 விசில் விட்...

சிறப்பு மிகுந்த சென்னா மசாலா! சென்னாவை 8 முதல் 10 மணி நேரம் நீரில் ஊறப்போட்டு, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து, பிரஷர் குக்கரில் 3 விசில் விட்டு குக்கரை சிம்மில் 5 நிமிடங்கள் வைத்து கையால் நன்கு நசுங்கும் பதத்திற்கு வேக வைப்பது மிக மிக அவசியம். இது சென்னா எளிதில் ஜீரணமாக உதவும். தானிய வகைகளில் மிகுந்த சுவையும், சத்தும் வாய்ந்த சென்னாவை நன்கு ஊறப்போட்டு வேக வைத்து கமகமவென மசாலா கிரேவி செய்து சேர்த்து சுவைத்தால் அதி அற்புதமாக இருக்கும். இம்முறை நாம் சென்னா மசாலா செய்வோமா? சென்னா மசாலா தேவையான பொருட்கள் வெள்ளைச் சென்னா - 2 கப் உப்பு - 1 டீஸ்பூன் எண்ணை - 8 டேபிள் ஸ்பூன் வதக்கி அரைக்க எண்ணை - 8 டேபிள் ஸ்பூன் வெங்காயம் - 1 தக்காளி - 2 பூண்டு - 8 பற்கள் இஞ்சி விழுது - 1/2 டீஸ்பூன் சிவப்பு மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் தனியாத் தூள் - 1 டீஸ்பூன் சீரகத்தூள் - 1 டீஸ்பூன் சோம்பு - 1/2 டீஸ்பூன் அலங்கரிக்க கொத்தமல்லித் தழை - சிறிதளவு செய்முறை * வெள்ளைச் சென்னாவை 8 முதல் 10 மணி நேரம் நீரில் ஊறப்போட்டு 1 சிட்டிகை உப்பு சேர்த்து குக்கரில் 3 விசில் விட்டு குக்கரை சிம்மில் 5 நிமிடங்கள் வைத்து வேக வைக்கவும். * வதக்கி அரைக்க என்ற தலைப்பில் கொடுக்கப்பட்டிருக்கும் பொருட்களை நன்கு சுருள வதக்கி, 2 டேபிள் ஸ்பூன் வேக வைத்த சென்னா சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி மிக்சியில் விழுதாக அரைக்கவும். (வேக வைத்த சென்னா 2 டேபிள் ஸ்பூன் அளவு சேர்ப்பதானது கிரேவியை கெட்டியாக்குவதுடன் சுவையை அதிகரிக்கும்.) * அரைத்த விழுதை மேலும் சிறிது எண்ணையில் நன்கு வதக்கி, வேக வைத்த சென்னா, உப்பு, வேக வைத்த சென்னாவில் இருந்த தண்ணீர் சேர்த்து ஒரு கொதிவிட்டதும் கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும். சுவைக்கான குறிப்பு * தேவையானால் வேக வைத்த உருளைக் கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கி கடைசியில் சேர்த்து ஒரு கொதி விடலாம். சுவை பிடித்தோர் உண்பதற்கு முன்பு சென்னாவில் சிறிது எலுமிச்சை சாறு பிழிந்து கலந்து உண்ணலாம். * சுவையான, சத்தான சென்னா மசாலா தயார். சப்பாத்தி, பரோட்டா போன்றவற்றிற்கு தற்காலத்தில் அனைவரும் வயது வித்தியாசமின்றி தொட்டுக் கொள்ள விரும்பும் சைடு டிஷ் `சென்னா மசாலா' அதி அற்புத சுவையை தன்னகத்தே அடக்கி உள்ள சென்னா, புரதம், நார்ச்சத்து, கால்சியம் சத்துக்கள் நிறைந்தது. குறைந்த கொழுப்புச்சத்துடன் வயிற்றை நிரப்பும் தன்மை வாய்ந்தது. சென்னா மசாலாவுடன் சேர்க்கப்படும் இஞ்சி, பூண்டு சீரகத்தூள் போன்றவற்றை சென்னா உறிஞ்சிக் கொள்வதால் நம் வயிற்றில் சேரக்கூடிய வாயுவை தடுக்கும்.

Related

சமையல் குறிப்புகள் 5259288254704923506

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item