ரசிக்க ருசிக்க…! ராஸ்பெர்ரி ரஸகுல்லா
ராஸ்பெர்ரி ரஸகுல்லா தேவையானவை: பனீர் & கால் கிலோ, சர்க்கரை & முக்கால் கிலோ, ராஸ்பெர்ரி எசன்ஸ் & சில துளிகள், ராஸ்பெர்ரி கலர் ...
https://pettagum.blogspot.com/2011/04/blog-post_6133.html
ராஸ்பெர்ரி ரஸகுல்லா
தேவையானவை:
பனீர் & கால் கிலோ,
சர்க்கரை & முக்கால் கிலோ,
ராஸ்பெர்ரி எசன்ஸ் & சில துளிகள்,
ராஸ்பெர்ரி கலர் & ஒரு சிட்டிகை.
செய்முறை: பனீரை ஒரு பாத்திரத்தில் போட்டு, கையினால் அழுத்தி, மிருதுவாகப் பிசையவும். பிறகு, அதனுடன் ராஸ்பெர்ரி கலரையும் எசன்ஸையும் சேர்த்துப் பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும். சர்க்கரை மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைக்கவும். அது கொதிக்கும்போது, பனீர் உருண்டைகளைப் போட்டு, அவை வெந்து மேலே மிதக்கும்போது எடுத்து ஒரு தட்டில் வைத்துப் பரிமாறவும் (சர்க்கரை சிரப் சேர்த்தும் சாப்பிடலாம்). கலர்கலராக பார்க்க அழகாக இருக்கும் இந்த ரஸகுல்லா, சாப்பிடவும் சுவையாக இருக்கும்.
Post a Comment