டிப்ஸ்! சமைக்க கற்றுக் கொடுங்கள்.....

டிப்ஸ்! சமைக்க கற்றுக் கொடுங்கள்..... Train to cook of child - Tips for Women பல குடும்பங்களில் வீட்டில் மனைவிக்கு உடல் நிலை சரியில்லாமல்...

டிப்ஸ்! சமைக்க கற்றுக் கொடுங்கள்..... Train to cook of child - Tips for Women பல குடும்பங்களில் வீட்டில் மனைவிக்கு உடல் நிலை சரியில்லாமல் போகும்போது அங்கே உணவு சமைப்பது யார் என்ற மிகப்பெரிய கேள்வி எழுகிறது. கூட்டுக் குடும்பம் என்றால் யாராவது ஒருவர் சமைத்து விடுவார்கள். தனிக்குடித்தனத்தில் இது சாத்தியமில்லை. ஆகவே கணவன்-மனைவி இருவருமே சமையல் தெரிந்தவர்களாக இருக்கவேண்டும். ஒருவேளை, கணவன்-மனைவி இருவருக்குமே உடல் நலம் குன்றிவிட்டால் அங்கே சமையல் செய்வது அடியோடு நின்று போய் விடுகிறது. ஓரளவு வசதியுள்ளவர்கள் என்றால் உணவகங்களில் சாப்பிட்டு சில நாட்களை கழித்து விடுவார்கள். ஆனால் உடல் நிலை சீரடைவது நீடித்தால் சிக்கல்தான். இது போன்ற இக்கட்டான நிலையை தவிர்க்க உங்கள் பிள்ளைகளுக்கு சிறுவயதிலேயே சமையல் கற்றுக் கொடுப்பது அவசியம். 12 வயதிலிருந்து அவர்களை சமையல் செய்யத் தயார் படுத்தலாம். மகள் மட்டுமின்றி மகனையும் சமையலுக்கு பழக்கலாம். ஆனால் இன்றைய பிள்ளைகள் சமையல் என்றாலே தூரம் ஓடுபவர்களாக இருக்கிறார்கள். இதனால் பிள்ளைகளை சமையல் செய்ய பழக்கும்போது, படிப்படியாகத்தான் கற்றுத் தரவேண்டும். எடுத்த எடுப்பிலேயே அதைச் செய், இதைச் செய் என்று அதட்டி வேலை வாங்காமல் சிறு சிறு வேலைகளை அவர்களுக்கு கொடுக்கவேண்டும். முதலில் கியாஸ், மண்எண்ணை அடுப்பு என்றால் பாதுகாப்பான முறையில் அவற்றை பற்ற வைக்க கற்றுத் தரவேண்டும். தண்ணீர் சுட வைப்பது, பால் காய்ச்சுவது, டீ-காபி போடுவது, தோசை சுடுவது, ஆம்லெட் போடுவது, முட்டையை வேக வைப்பது போன்றவற்றை செய்ய பழக்கவேண்டும். இந்த மாதிரி சிறுசிறு வேலைகளில் எல்லா பிள்ளைகளுக்குமே ஆர்வம் இருக்கும். இதற்கு பழக்கிய பின்னர் அரிசி களைவது, காய்கறிகளை நறுக்குவது, கழுவுவது, மசாலாப் பொருட்களை ஒன்று சேர்ப்பது போன்ற வேலையை செய்யச் சொல்லலாம். நான்காவது கட்டமாக அவற்றை குக்கர்-வாணலியில் எந்த நேரத்தில் போடவேண்டும், எந்த நேரத்தில் இறக்கவேண்டும், வாணலியில் வறுப்பது என்றால் எந்தெந்த நேரத்தில் எல்லாம் காய்கறிகளை கிளறிவிடவேண்டும் என்பதைச் சொல்லித் தரலாம். இதேபோல் சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்களின் அளவிற்கேற்ப பாத்திரங்களை கையாள்வது பற்றி பிள்ளைகளுக்கு எடுத்துக் கூறவேண்டும். பொருட்களின் அளவை நீங்கள் எடுத்துக் கொடுக்காமல் அவர்களிடமே அந்த பொறுப்பை விடவேண்டும். சமையலைக் கற்றுத் தரும்போது அருகிலேயே நீங்கள் இருந்து விளக்கவேண்டும். எண்ணையை உபயோகிக்கும்போது அதை அவர்கள் சரியான அளவில் ஊற்றுவதற்கும் சொல்லித் தரவேண்டும். சாதம் வடிப்பதற்கு தேவைப்படும் தண்ணீரின் அளவு, குடும்ப நபர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தேவைப்படும் அரிசியின் அளவு, காய்கறிகளை வேக வைப்பதற்கு போதுமான தண்ணீர், சாம்பார் பொடி, மசாலாப் பொடி எவ்வளவு தேவை என்பதையும் சுயமாக தேர்ந்தெடுக்கும் வகையில் பழக்கவேண்டும். கத்தி, அரிவாள் மனையை அவர்களாகவே கையாளும் அளவிற்கு பழக்கவேண்டாம். ஓரளவு சமையலில் தேர்ந்த பின்பு சொல்லிக் கொடுங்கள்.

Related

சமையல் குறிப்புகள் 2979827722455266565

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item