சமையல் குறிப்புகள்! சேனைக்கிழங்கு சாப்ஸ்
சேனைக்கிழங்கு சாப்ஸ் தேவையானவை: சேனைக்கிழங்கு & கால் கிலோ, மஞ்சள் தூள் & 1 சிட்டிகை, எண்ணெய் & தேவைக்கேற்ப. அரைக்க: தேங்காய் ...
https://pettagum.blogspot.com/2011/04/blog-post_4922.html
சேனைக்கிழங்கு சாப்ஸ்
தேவையானவை: சேனைக்கிழங்கு & கால் கிலோ, மஞ்சள் தூள் & 1 சிட்டிகை, எண்ணெய் & தேவைக்கேற்ப.
அரைக்க: தேங்காய் & 1 மூடி, பூண்டு & 4 பல், உப்பு & தேவைக்கேற்ப, காய்ந்த மிளகாய் & 12, சோம்பு & 1 டீஸ்பூன்.
செய்முறை: சேனைக்கிழங்கை தோல் சீவி, சற்றுப் பெரிய சதுர வில்லைகளாக நறுக்கவும். அவற்றை மஞ்சள்தூள் உப்பு சேர்த்து, வேக வைத்து, நீரை வடித்தெடுக்கவும். அரைக்கக் கொடுத்திருக்கும் பொருள்களை, விழுதாக அரைத்தெடுக்கவும். அரைத்த விழுதை, வேகவைத்த கிழங்குத் துண்டுகளின் இருபுறமும் தடவவும். பின்னர் தோசைக்கல்லைக் காயவைத்து, அதில் 3 அல்லது 4 துண்டுகளாகப் பரப்பிவைத்து, அதைச் சுற்றிலும் எண்ணெய் விட்டு வேக விடவும். பின்னர் திருப்பிவிட்டு, மறுபுறமும் எண்ணெய் விட்டு நன்கு ரோஸ்ட்டாக வேகவிட்டு எடுக்கவும்.
Post a Comment