ஆஹா! அதுவன்றோ சொர்க்கம்! ஓட்ஸ் அல்வா
ஓட்ஸ் அல்வா தேவையானவை: ஓட்ஸ் & ஒரு கப், பால் & முக்கால் முதல் ஒரு கப் வரை, சர்க்கரை & முக்கால் கப், முந்திரிப்பருப்பு & 5...
https://pettagum.blogspot.com/2011/04/blog-post_4087.html
ஓட்ஸ் அல்வா
தேவையானவை:
ஓட்ஸ் & ஒரு கப்,
பால் & முக்கால் முதல் ஒரு கப் வரை,
சர்க்கரை & முக்கால் கப்,
முந்திரிப்பருப்பு & 5&லிருந்து 6,
ஏலக்காய்தூள் & ஒரு டீஸ்பூன்,
நெய் & 3 டேபிள்ஸ்பூன்,
கேசரி பவுடர் & ஒரு சிட்டிகை.
செய்முறை: ஒரு கனமான கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யை விட்டு, அதில் முந்திரிப்பருப்பை வறுத்து தனியே எடுத்துவைக்கவும். பிறகு, ஓட்ஸை லேசாக வறுத்துப் பொடிசெய்யவும். இதை கடாயில் போட்டு, பாலைச் சேர்த்துக் கிளறவும். சீக்கிரமே வெந்துவிடும். பிறகு சர்க்கரை சேர்க்கவும். ஏலப்பொடி, கேசரி பவுடர் சேர்த்து, மீதி நெய்யையும் ஊற்றி, கெட்டியாகக் கிளறி, வறுத்து வைத்திருக்கும் முந்திரி துண்டுகளைத் தூவி இறக்கவும்.
ஓட்ஸில் இவ்வளவு சுவையாக அல்வாவா? என்று வியந்துபோவார்கள் சாப்பிட்டவர்கள்.
Post a Comment