கைமணம்! மொறுமொறு மோர் சீடை!
மோர் சீடை தேவையானவை: புளித்த மோர் - ஒரு கப், பச்சைமிளகாய் விழுது - 2 டீஸ்பூன், வெண்ணெய் - 2 டீஸ்பூன், அரிசிமாவு -- 2 கப், பொட்டுக்கடலை மாவ...
https://pettagum.blogspot.com/2011/04/blog-post_3153.html
மோர் சீடை
தேவையானவை:
புளித்த மோர் - ஒரு கப், பச்சைமிளகாய் விழுது - 2 டீஸ்பூன், வெண்ணெய் - 2 டீஸ்பூன், அரிசிமாவு -- 2 கப், பொட்டுக்கடலை மாவு - அரை கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
ஈர அரிசி மாவை வறுத்து சலித்து எடுத்து, அதனுடன் பொட்டுக்கடலை மாவு, பச்சைமிளகாய் விழுது, உப்பு, புளித்த மோர் விட்டு கலந்து வெண்ணெய் சேர்த்து நன்கு பிசையவும், சின்னச் சின்ன சீடைகளாக உருட்டி ஒரு துணியில் காயப் போடவும். ஈரம் சிறிது காய்ந்ததும் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
மோர் சீடை: சிறிது தேங்காய் துருவலை சேர்த்து செய்தால்.. வாசனையாக இருக்கும்.
________________________________________
Post a Comment