சமையல் குறிப்புகள்! உருண்டைக் கறிக்குழம்பு

உருண்டைக் கறிக்குழம்பு தேவையான பொருள்கள்: மட்டன் (கொத்தியது) - 1 கிலோ தேங்காய் - 1/2 முடி வெங்காயம் - 6 தக்காளி - 4 மிளகாய்த் தூள் - 2 டீ...

உருண்டைக் கறிக்குழம்பு தேவையான பொருள்கள்: மட்டன் (கொத்தியது) - 1 கிலோ தேங்காய் - 1/2 முடி வெங்காயம் - 6 தக்காளி - 4 மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன் தனியா தூள் - 3 டீஸ்பூன் மஞ்சள் தூள் - சிறிதளவு பட்டை - 2 துண்டு லவங்கம் - 3 உப்பு - தேவையான அளவு கொத்துமல்லி - தேவையான அளவு கறிவேப்பிலை - தேவையான அளவு உடைத்த கடலை - ஒரு கைபிடி சோம்பு - சிறிதளவு செய்முறை: கறித் துண்டுகளை நன்கு அலசி மிக்ஸியில் போட்டு லேசாக அரைத்து கொள்ள வேண்டும். தேங்காயை நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும். வெங்காயம், கொத்துமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். இஞ்சி, பூண்டை விழுதாக அரைத்துக் கொள்ளவும். உடைத்த கடலையை பொடி செய்து வைத்துக் கொள்ளவும் ஒரு பாத்திரத்தில் அரைத்த கறித் துண்டுகளைப் போட்டு அதனுடன், வெங்காயம், மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள் (இது எல்லாமே எடுத்து வைத்திருப்பதில் பாதி அளவு), உடைத்த கடலை தூள், தேவையான அளவு உப்பு, இஞ்சி, பூண்டு விழுது, சிறிதளவு கொத்தமல்லி, கறிவேப்பிலை என அனைத்தையும் கலந்து கொள்ள வேண்டும். இந்த கலவையை சிறிய உருண்டைகளாக செய்து ஆவியில் வேகவைத்து எடுத்து கொள்ளவும். குழம்பு வைக்கும் பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் பட்டை, லவங்கம், சோம்பு, சேர்த்து பிறகு வெங்காயம் போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுதையும், பிறகு தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். பிறகு மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள் (மீதி இருப்பது) சேர்த்து வதக்கவும். பின்னர் அரைத்து வைத்திருக்கும் தேங்காயை சேர்த்து நன்கு வதக்கி, தேவையான அளவு தண்ணீர் விடவும். கொத்தமல்லி, கறிவேப்பிலை போடவும். குழம்பு நன்கு கொதித்தவுடன் ஆவியில் வேகவைத்த உருண்டைகளை போட்டு அனல் குறைத்து வைக்கவும். 5 நிமிடம் வைத்து பிறகு இறக்கிவிடவும். இது சாப்பாட்டுக்கு மிகவும் அருமையாக இருக்கும். குழம்பும் தயார், துணை உணவாக கறி உருண்டையும் தயார். கறி உருண்டை குழம்பின் வாசனை உங்களை விட்டு வைக்குமா என்ன, சமைத்து ருசி பாருங்கள்... குறிப்பு : குழம்பில் உருண்டைகளைப் போடும் போது தீ குறைவாக இருந்தால் தான் உருண்டைகள் உடையாமல் வரும்.

Related

சமையல் குறிப்புகள் 1783813372193401053

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item