அசத்தல் சுவையில் தட்டை ரெடி!
தட்டை தேவையான பொருட்கள்: அரிசி மாவு & 2 கப், வறுத்த வேர்க்கடலை, பொட்டுக்கடலை & தலா அரை கப், மிளகாய்தூள் & 1 டீஸ்பூன், எள், நெய...
https://pettagum.blogspot.com/2011/04/blog-post_2913.html
தட்டை
தேவையான பொருட்கள்: அரிசி மாவு & 2 கப், வறுத்த வேர்க்கடலை, பொட்டுக்கடலை & தலா அரை கப், மிளகாய்தூள் & 1 டீஸ்பூன், எள், நெய் & தலா 2 டேபிள் ஸ்பூன், பெருங்காயம் & அரை டீஸ்பூன், மிளகாய்தூள் & 2 டீஸ்பூன், கறிவேப்பிலை & சிறிது, உப்பு & தேவைக்கு, எண்ணெய் & தேவைக்கு.
செய்முறை: வேர்க்கடலையை தோல் நீக்கி, ஒன்றி ரண்டாக உடையுங்கள். பொட்டுக்கடலையையும், கறி வேப்பிலையையும் சேர்த்து ஒன்றிரண்டாக உடையுங்கள். எண்ணெய் நீங்கலாக, மற்ற எல்லாப் பொருள்களையும் ஒன்றாக சேர்த்துப் பிசறுங்கள். இதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து, கெட்டியாகப் பிசையுங்கள். சிறு உருண்டைகளாக்கி, தட்டைகளாக தட்டி, எண்ணெயில் பொரித்தெடுங்கள். அசத்தல் சுவையில் தட்டை ரெடி!
--------------------------------------------------------------------------
Post a Comment