சமையல் குறிப்புகள்--முருங்கை மட்டன் குருமா
முருங்கை மட்டன் குருமா தேவையான பொருட்கள் மட்டன் - 1/2 கிலோ கடலைபருப்பு - 1/2 ஆழாக்கு முருங்கைக்காய் - 4 இஞ்சி - சிறுதுண்டு பூண்டு - 4 பல்...
https://pettagum.blogspot.com/2011/04/blog-post_27.html
முருங்கை மட்டன் குருமா
தேவையான பொருட்கள்
மட்டன் - 1/2 கிலோ
கடலைபருப்பு - 1/2 ஆழாக்கு
முருங்கைக்காய் - 4
இஞ்சி - சிறுதுண்டு
பூண்டு - 4 பல்
தேங்காய் - 1/4 மூடி
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
வெங்காயம் - 200 கிராம்
பச்சைமிளகாய் - 4
தயிர் - 1 கப்
பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா இரண்டு
சோம்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணை - 1/2 குழிக்கரண்டி
செய்முறை
* கடலைப்பருப்பை இரண்டு மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்.
* மட்டனை சுத்தம் செய்து வேக வைக்கவும்.
* தேங்காய், இஞ்சி, பூண்டு இவற்றை அரைத்துக் கொள்ளவும்.
* வெங்காயம், தக்காளி இவற்றை நறுக்கி கொள்ளவும். மிளகாயைக் கீறிக் கொள்ளவும்.
* அகலமான வாணலியில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய், சோம்பு, கறிவேப்பிலை இவை சேர்த்து தாளிக்கவும்.
* இப்போது சிறிது தண்ணீர் சேர்த்து கடலைப் பருப்பையும் போடவும்.
* தொடர்ந்து வேக வைத்த மட்டன் துண்டுகளையும், முருங்கைக் காய் துண்டுகளையும் சேர்த்து நன்கு வேகவிடவும்.
* பின் தயிரை சேர்த்து, தொடர்ந்து வெங்காயம், தக்காளி, மிளகாய் இவற்றையும் சேர்த்து வதக்கவும்.
* திட்டமான தண்ணீர் சேர்த்து கெட்டியாக வேகவைத்து இறக்கினால் நாக்கை சுண்டி இழுக்கும் சுவை நிறைந்த குருமா தயார்.
Post a Comment