சமையல் குறிப்புகள்! பட்டூரா
பட்டூரா தேவையான பொருட்கள் * மைதா- இரண்டு கோப்பை * தயிர்-அரைக் கோப்பை * தண்ணீர்- அரைக்கோப்பை * பேக்கிங் பவுடர்-ஒரு தேக்கரண்டி * ...
https://pettagum.blogspot.com/2011/04/blog-post_248.html
பட்டூரா
தேவையான பொருட்கள்
* மைதா- இரண்டு கோப்பை
* தயிர்-அரைக் கோப்பை
* தண்ணீர்- அரைக்கோப்பை
* பேக்கிங் பவுடர்-ஒரு தேக்கரண்டி
* ஆப்பச் சோடா- ஒரு சிட்டிக்கை
* எண்ணெய்- இரண்டு தேக்கரண்டி
* உப்பு- ஒரு தேக்கரண்டி
* எண்ணெய்- பொரிக்க தேவையான அளவு
செய்முறை
* மைதாவில் உப்பு,பேக்கிங் பவுடர்,மற்றும் சோடாவைப் போட்டு ஜல்லடையில் ஜலித்து கொள்ளவும்.
* பிறகு அதில் தயிரையும் எண்ணெயையும் ஊற்றி பிசறிய பின் தண்ணீரை சிறுது சிறிதாக ஊற்றி நன்கு பிசைந்து சுமார் இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்.
* பின்பு மீண்டும் ஒரு முறை நன்கு பிசைந்து சிறிய எலுமிச்சையளவு பத்து அல்லது பன்னிரெண்டு உருண்டைகளாக உருட்டவும்.
* பின்பு உருட்டிய உருண்டைகளை சற்று அடர்த்தியான அகன்ற பூரிகளாக தேய்த்து சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
* இந்த சுவையான பட்டூராவை சூடாக,சன்னா மசாலாவுடன் பரிமாறவும்.
Post a Comment