சமையல் குறிப்புகள்! முருங்கைக்கீரை இனிப்பு அடை
முருங்கைக்கீரை இனிப்பு அடை தேவையானவை: ராகி மாவு - ஒரு கப், உருவிய முருங்கைக்கீரை - அரை கப், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, வெல்லம் - அரை க...
https://pettagum.blogspot.com/2011/04/blog-post_2307.html
முருங்கைக்கீரை இனிப்பு அடை
தேவையானவை:
ராகி மாவு - ஒரு கப், உருவிய முருங்கைக்கீரை - அரை கப், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, வெல்லம் - அரை கப், பொடியாக நறுக்கிய தேங்காய் - கால் கப், விருப்பப்பட்டால் சுக்குப் பொடி - ஒரு சிட்டிகை, நெய் - தேவையான அளவு.
செய்முறை:
முருங்கைக்கீரை, ராகி மாவுடன் ஏலக்காய்த்தூள்,பொடியாக நறுக்கிய தேங்காய், சுக்குப்பொடி சேர்த்து கலக்கவும். வெல்லத்தில் சிறிது தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து கரைந்ததும், சூடாக வடிகட்டி மாவில் ஊற்றி, நன்றாக பிசைந்து கொள்ளவும். வெல்லத் தண்ணீர் போதவில்லையென்றால், அதில் சுடுநீரை சேர்த்துக் கொள்ளலாம். ஒரு பிளாஸ்டிக் ஷீட் (அ) வாழை இலையின் மேல் பிசைந்த மாவை சிறிது எடுத்து தட்டவும். தோசைக்கல் காய்ந்ததும் அதில் போட்டு, சுற்றிலும் நெய் விட்டு, மிதமான தீயில், இருபுறமும் திருப்பி போட்டு, வெந்ததும் எடுக்கவும்.
Post a Comment