சமையல் குறிப்புகள்! ஆலு தால்
ஆலு தால் தேவையானவை: உருளைக்கிழங்கு & கால் கிலோ, பாசிப்பருப்பு & அரை கப், தக்காளி & 2, பச்சை மிளகாய் & 50 கிராம், மிளகு &am...
https://pettagum.blogspot.com/2011/04/blog-post_2273.html
ஆலு தால்
தேவையானவை:
உருளைக்கிழங்கு & கால் கிலோ, பாசிப்பருப்பு & அரை கப், தக்காளி & 2, பச்சை மிளகாய் & 50 கிராம், மிளகு & 2 டேபிள்ஸ்பூன், சீரகம் & அரை டீஸ்பூன், கரம் மசாலாதூள் & 2 டீஸ்பூன், உப்பு & ருசிக்கேற்ப, தனியாதூள் & ஒரு டீஸ்பூன், ஆம்சூர் தூள் அல்லது எலுமிச்சம்பழச் சாறு & ஒரு டீஸ்பூன்.
செய்முறை:
தேவையான தண்ணீர் விட்டு பாசிப் பருப்பை வேகவிடவும். கடாயில் எண்ணெய் விட்டு, உருளைக்கிழங்கு துண்டுகளை 5 நிமிடம் வறுக்கவும். தனியாதூள், மசாலாதூள், மிளகு, உப்பு சேர்த்து மூடி போட்டு 5 நிமிடம் வதக்கவும். நடுநடுவே கிளறிவிடவும். மற்றொரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு சீரகத்தைப் போட்டு, வெடித்ததும் வெந்த பருப்பைப் போட்டு மேலும் 2 நிமிடம் கொதிக்கவிடவும். வறுத்த உருளைக்கிழங்கு துண்டுகளை சேர்த்து மேலும் 2, 3 நிமிடம் கிளறவும். கலவை கெட்டியானதும், ஆம்சூர் தூளோ அல்லது எலுமிச்சை சாறோ ஊற்றி, ஒரு கிளறு கிளறி இறக்கவும்.
Post a Comment