சமையல் குறிப்புகள்! சேனைக்கிழங்கு குண்டு வறுவல்
சேனைக்கிழங்கு குண்டு வறுவல் தேவையானவை: சேனைக்கிழங்கு (தோல் நீக்கி, பட்டாணி அளவு துண்டுகளாக நறுக்கியது) & 1 கப், உலர்ந்த திராட்சை &...
https://pettagum.blogspot.com/2011/04/blog-post_1839.html
சேனைக்கிழங்கு குண்டு வறுவல்
தேவையானவை: சேனைக்கிழங்கு (தோல் நீக்கி, பட்டாணி அளவு துண்டுகளாக நறுக்கியது) & 1 கப், உலர்ந்த திராட்சை & 20, வேர்க்கடலை & 2 டேபிள்ஸ்பூன், அச்சுக் கற்கண்டு & 2 டேபிள்ஸ்பூன், முந்திரிப்பருப்பு (வறுத்துப் பொடியாக நறுக்கியது) & 4, எண்ணெய் & கால் கப், உப்பு & தேவைக்கேற்ப, மிளகாய் தூள் & 2 டீஸ்பூன்.
செய்முறை: வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, அதில் சேனைக்கிழங்கைப் போட்டு, நன்கு மொறுமொறுப்பாக வறுத்தெடுத்து, அதில் உப்பு, மிளகாய்தூள் பிசறவும். வேர்க்கடலையை எண்ணெயில் வறுத்தெடுக்கவும். பின்னர் முந்திரிப்பருப்பையும் கடைசியாக உலர்ந்த திராட்சையையும் வறுத்தெடுகக்வும். பிறகு அச்சுக் கற்கண்டுடன் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துக் கலந்து குலுக்கி விட்டு பரிமாறவும்.
விருந்துகளுக்கு ஏற்ற, விசேஷமான அயிட்டம் இது. சிறு பிள்ளைகள் ரசித்து உண்பார்கள்.
Post a Comment