அவசர உலகின் ஆரோக்கிய வாழ்வுக்கு...சீரகப் பால்
சீரகப் பால்! ‘செய்வது எளிது; செலவும் குறைவு; பலனோ நிறைவு!’ தேவையானவை: சீரகம் & 25 கிராம், தேங்காய்ப் பால் & 3 கப், வெல்லம் & 1...
https://pettagum.blogspot.com/2011/04/blog-post_1781.html
சீரகப் பால்!
‘செய்வது எளிது; செலவும் குறைவு; பலனோ நிறைவு!’
தேவையானவை: சீரகம் & 25 கிராம், தேங்காய்ப் பால் & 3 கப், வெல்லம் & 100 கிராம், தண்ணீர் & 1 கப்.
செய்முறை: சீரகத்தை அரைமணி நேரம் ஊறவைத்து, அதன்பின் நன்றாக அரைத்து, ஒரு கப் தண்ணீர் சேர்த்து, வடிகட்டி சாறு எடுக்கவும். வெல்லத்தைப் பொடி செய்து, 1 கப் தண்ணீரில் கலந்து வடிகட்டி, தேங்காய்ப் பாலுடன் சேர்க்கவும். மேலும், ' ஜில்லெனச்'சாப்பிட நினைத்தால், ஃப்ரிஜ்ஜில் வைத்தோ அல்லது தேவையான அளவு ஐஸ்கட்டிகளைச் சேர்த்தோ சாப்பிடலாம். வித்தியாசமான சுவையில், புத்துணர்ச்சியைத் தரும் இந்தச் சீரகப் பால்.
கூடுதல் சிறப்பு: கோடைக் காலத்தில் உடலைக் குளிர்ச்சிப்படுத்த, இது அற்புதமான வழி. மேலும், ஜீரண சக்தியையும் இது தரும். இரவில் சீரகப் பால் அருந்தினால், நல்ல தூக்கத்துக்கு நூறு சதவிகித உத்திரவாதம்!
Post a Comment