சமையல் குறிப்புகள்! காளன்
தேவையானபொருட்கள்: சேனை-150 கிராம், நேந்திரங்காய் அல்லது வாழைக்காய்-பாதி, புளித்த தயிர்-3 கப், துருவிய தேங்காய்-1 கப், மஞ்சள்தூள், மிளகாய்த் ...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_9233.html
தேவையானபொருட்கள்: சேனை-150 கிராம், நேந்திரங்காய் அல்லது வாழைக்காய்-பாதி, புளித்த தயிர்-3 கப், துருவிய தேங்காய்-1 கப், மஞ்சள்தூள், மிளகாய்த் தூள், சீரகம்-தலா 1 டீஸ்பூன், பச்சை மிளகாய்-6, காய்ந்த மிளகாய்-4, கடுகு-2 டீஸ்பூன், வெந்தயம்-½ டீஸ்பூன், கறிவேப்பிலை-1 பிடி, தேங்காய் எண்ணெய் (விருப்பப்பட்டால்) - தேவையான அளவு, உப்பு-சுவைக்கேற்ப.
செய்முறை: காய்கறிகளை பெரிய துண்டுகளாக நறுக்கி உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சிறிதளவு தண்ணீர் சேர்த்து மூடி சிம்மில், குழையாமல் வேக வைக்கவும். தேங்காய்த் துருவல், சீரகம், பச்சை மிளகாய் ஆகியவற்றை அரைத்து தயிருடன் கலந்து கொள்ளவும். இந்தக் கலவையில் வெந்த காய்கறிகளைச் சேர்த்து கொதிக்க விடவும். இதில் கடுகு, கறிவேப்பிலை, வெந்தயம் தாளித்துக் கொட்டி... சுடச்சுட சுவையுங்கள்.
Post a Comment