சுவையான பானம்! பேரீச்சம் பழப் பால் திரட்டல்-கொங்கு நாட்டுச் சமையல்
பேரீச்சம்பழ பால் திரட்டல் மிகவும் ருசியானது. மிகவும் பிரமலமானது. எத்தனை தடவை சாப்பிட்டாலும் அதே மணம், ருசி இருப்பதால் அலுக்கவே அலுக்காது. ச...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_9110.html
பேரீச்சம்பழ பால் திரட்டல் மிகவும் ருசியானது. மிகவும் பிரமலமானது. எத்தனை தடவை சாப்பிட்டாலும் அதே மணம், ருசி இருப்பதால் அலுக்கவே அலுக்காது. சமைத்து பாருங்களேன்.
பேரீச்சம்பழ பால் திரட்டல்
தேவையான பொருட்கள்:
பேரீச்சம்பழம் நறுக்கியது 1கப்
பால் 1 லிட்டர்
சர்க்கரை கால் கிலோ
சேமியா 150 கிராம்
உலர், தேங்காய் துருவல் 50 கிராம்
நெய் 200 மில்லி
உலர் திராட்சை 50 கிராம்
செய்முறை :
முதலில் பாலை நன்றாக காய்ச்சவும்,
பிறகு அதில் சர்க்கரையை சேர்த்து நன்றாக கலக்கவும்,
நறுக்கிய பேரீச்சம்பழம், உலர்ந்த தேங்காய்த் துருவல்,
உலர் திராட்சை அனைத்தையும் நெய்யில் நன்றாக வறுத்துக் கொள்ளவும்.
பிறகு சேமியாவை நெய்யில் பொன்னிறமாக வறுத்து,
கொதிக்கும் பாலில் சேர்த்து நன்றாக கலக்கவும்.
அதில் வறுத்த பேரீச்சம் பழம் அனைத்தையும்
பாலுடன் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
சேமியா வெந்தவுடன் இறக்கினால் பேரீச்சம் பழப் பால் திரட்டல் தயார்.
மீண்டும், மீணடும் பருகத் தூண்டும் சூடான சுவையான பானம் இது.
Post a Comment