சமையல் குறிப்புகள்! கேரட் - ராகி அடை
கேரட் - ராகி அடை தேவையானவை: கேழ்வரகு மாவு, துருவிய கேரட் - தலா ஒரு கப், பொடி யாக நறுக்கிய மல்லித் தழை, பச்சை மிளகாய் - சிறிதளவு, புளித்த த...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_8716.html
கேரட் - ராகி அடை
தேவையானவை: கேழ்வரகு மாவு, துருவிய கேரட் - தலா ஒரு கப், பொடி யாக நறுக்கிய மல்லித் தழை, பச்சை மிளகாய் - சிறிதளவு, புளித்த தயிர் - அரை கப், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: ஒரு டீஸ்பூன் எண்ணெயில் பச்சைமிளகாய், மல்லித்தழையை போட்டு வதக்கி, கேரட்டை சேர்க்கவும். கேரட் சிறிது வதங்கியதும், அதில் புளித்த தயிருடன் அரை கப் தண்ணீர் சேர்த்து உப்பு, பெருங்காயத்தூளை போட்டு கொதிக்க விடவும். நன்றாக கொதித்ததும் கேழ்வரகு மாவை சிறிது சிறிதாக போட்டுக் கிளறி, வெந்ததும் இறக்கி விடவும். பிறகு சிறு உருண்டைகளாக உருட்டி தோசைக்கல்லில் போட்டு அடைகளாக சுட்டெடுக்கவும். விருப்பப்பட்டால் கிளறும்போது சிறிது தேங்காய் துருவல் சேர்த்துக் கொள்ளலாம்.
Post a Comment