பாதங்களை பராமரிக்க சில "டிப்ஸ்'கள்!

பாதங்களை கவனியுங்க முக அழகையும், உடலழகையும் பராமரிப்பதில் ஆர்வம் காட்டும் பெண்கள், கை, கால்களின் அழகு குறித்து அதிக அக்கறை காட்டுவதில்லை. ஆன...

பாதங்களை கவனியுங்க முக அழகையும், உடலழகையும் பராமரிப்பதில் ஆர்வம் காட்டும் பெண்கள், கை, கால்களின் அழகு குறித்து அதிக அக்கறை காட்டுவதில்லை. ஆனால், பல வேலைகளை நாம் கை, கால்களை கொண்டுதான் செய்கிறோம் என்பதால், அவற்றின் அழகை பராமரிப்பதும் மிகவும் முக்கியம். ""நம்முடைய உடலின் எடை முழுவதையும் நம் பாதங்கள் தான் தாங்குகின்றன. அதனால், பாதங்களின் ஆரோக்கியம் மிகவும் முக்கியம்,'' என்று டில்லியிலுள்ள "ஏசியன் ரூட்ஸ் ஸ்பா'வின் உரிமையாளர் காம்யானி கன்வர் கூறுகிறார். ""வாரத்திற்கு ஒருமுறையாவது பாதங்களுக்கு மசாஜ் செய்ய வேண்டும். பாதங்களை இளஞ்சூடான நீரில் சிறிது நேரம் வைத்திருந்து மசாஜ் செய்தால் பாதங்களிலுள்ள அழுக்குகளை நீக்கலாம். இதுதவிர, பாதங்களிலிருக்கும் இறந்த செல்களும் அழியும். இதன் மூலம் பாதங்களிலிருந்து வரும் துர்நாற்றத்தை போக்க முடியும். இது தவிர, ரத்த ஓட்டம் அதிகரிக்கவும் இந்த மசாஜ் உதவுகிறது. மசாஜ் செய்யும் போது, நீரில் கலக்கப்படும் மாய்ச்சரைசர்களால் பாதம் மிகவும் மிருதுவாகும். பாதத்திற்கு மசாஜ் செய்யும் போது, மனதிற்கு மிகவும் ரிலாக்சாக இருக்கும். ஏனெனில், உடலில் உள்ள அனைத்து நரம்புகளும் பாதத்தில் முடிவடைகின்றன. அதனால், பாதத்தில் மசாஜ் செய்யும்போது அது உடல் முழுவதற்கும் புத்துணர்ச்சியை தருகிறது. இது தவிர, வளர்ச்சி பெறாத நகங்கள், பாத வெடிப்புகள் மற்றும் கால் தடிப்பு போன்ற பிரச்னைக்கும் இந்த மசாஜ் தீர்வாக அமையும். அழகு நிலையங்களில் செய்யப் படும் மசாஜின்போது, எண்ணெய்கள் பயன் படுத்தப்படுவதால் அது தளர்ந்து போன உடல் தசைகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். பாதங்கள் தடிப்பால் அவதிப்படுவோர் படுக்கப் போகுமுன் பாதங்களை ஐந்து முதல் பத்து நிமிடங்கள், ரோஸ்மேரி எண்ணெய் கலந்த இளஞ்சூடான நீரில் வைக்க வேண்டும். இப்படி தொடர்ந்து வைத்தால், பாதங்களின் தடிப்பால் ஏற்படும் வலி காணாமல் போய்விடும். கால் தடிப்பு மிகவும் காய்ந்து போயிருந்தால், கடல் உப்பைக் கொண்டு அந்த பகுதியை தேய்க்க வேண்டும். அதன் பிறகு, படிகாரக் கல் கொண்டு தேய்க்கவேண்டும். பிறகு, வாசலின் தடவி அப்படியே விட்டுவிடவேண்டும். 25 கிராம் வாசலினுடன் ரோஸ்மேரி எண்ணெயும், சந்தன எண்ணெயும் சில சொட்டுகள் சேர்த்து தேய்த்தால் பாதம் மிகவும் மிருதுவாக இருக்கும். கால் தடிப்புகள் மிகவும் முற்றிய நிலையில் இருந்தால், தகுந்த மருத்துவரை அணுகுவதே சிறந்தது. அழகுக் கலை நிபுணர்களிடம் சென்றால் பலனளிக்காது. பாதங்களை பராமரிக்க சில "டிப்ஸ்'கள் * பாத நகங்களில் பூசும் நகப் பூச்சுகளை நீண்ட காலம் தொடர்ந்து அப்படியே விட்டு விடாதீர்கள். அப்படி விட்டால் நகங்கள் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. நகத்தின் இயற்கை நிறமும் போய்விடும். அவ்வப்போது, நகப் பூச்சுகளை ரிமூவர் கொண்டு எடுத்து விடுங்கள். * தினமும் குளிக்கும் போது, இளஞ்சூடான நீரில் பாதங்களை சிறிது நேரம் வைத்திருக்கலாம். * மசாஜ் செய்யும் போது, பாத விரல்களுக்கு இடையில் மாய்ச்சரைசிங் கிரீம் கொண்டு தேய்த்து அதன் பிறகு பாதம் முழுவதும் தேய்த்தால் மிகவும் இதமாக இருக்கும். * குளிர்ச்சியான ஜெல் கொண்டு மசாஜ் செய்தால், தளர்ந்து போன தசைகளுக்கு புத்துணர்ச்சி தரும். * கால்களைப் போலவே கைகள் பராமரிப்பும் மிகவும் முக்கியம். ஏனெனில், சலவை சோப் போன்ற தோலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை நாம் கைகளை கொண்டுதான் பயன்படுத்துகிறோம். சீதோஷ்ண நிலை மாற்றங்களும் கைகளை வெகுவாக பாதிக் கின்றன. உடலில் மற்ற பகுதிகளில் உள்ள தோலை விட, கைகளின் மேல்தோல் முதிர்ச்சி அடைந்தது போன்ற தோற்றத்தை தரும். பாதங்களைப் போல கைகளிலும் எண்ணெய்ச் சுரப்பிகள் மிகக் குறைவாகவே உள்ளன. எனவே, கைகளை பாதுகாப்பது மிகவும் அவசியம். தினமும், நல்ல மாய்ச்சரைசர் கிரீம் ஒன்றை கைகளில் தேய்த்துக் கொள்ளலாம். தண்ணீரில் வேலை செய்யும் போது கையுறைகளை அணிந்து கொள் ளலாம். தொடர்ந்து கைகளுக்கு மசாஜ் செய்து வந்தால், தளர்ந்த தோல் புத்துணர்ச்சி அடையும். காய்ந்து போன நகங்கள் அழகாகும். மேல்தோலில் வலி இருந்தால் குணமாகும்.

Related

ஹெல்த் ஸ்பெஷல் 9100618913027761641

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item