பழகிய பொருள்... அழகிய முகம்! நீள கூந்தலுக்கு உளுத்தம் பருப்பு!

கண்ணுக்குக் குளிர்ச்சி, முகத்துக்கு மலர்ச்சி, கூந்தலுக்குப் பொலிவு, உடலுக்கு வலிமை கொடுக்கும் அழகு + ஆரோக்கிய ராணியான உளுத்தம் பருப்புதான் ...

கண்ணுக்குக் குளிர்ச்சி, முகத்துக்கு மலர்ச்சி, கூந்தலுக்குப் பொலிவு, உடலுக்கு வலிமை கொடுக்கும் அழகு + ஆரோக்கிய ராணியான உளுத்தம் பருப்புதான் நம் அஞ்சறைப் பெட்டி அணிவகுப்பில் அடுத்து வருகிறாள்! மென்மையான கூந்தலை விரும்புகிறவரா நீங்கள்? கொஞ்சமே கொஞ்சம் மெனக்கெட்டால் முரட்டுக் கூந்தலும் பட்டுப்போல் மிருதுவாகும்! 15 முழு உ.பருப்பை புளித்த தயிரில் இரவே ஊறவையுங்கள். காலையில் அரைத்து, அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் சீயக்காய்த்தூளைக் கலந்துகொள்ளுங்கள். வாரம் ஒருமுறை இந்த பேஸ்ட்டை தலைக்குத் தேய்த்து அலசுங்கள். தலைமுடி கண்டிஷனாக இருப்பதுடன், சோர்வு நீங்கி, கண்கள் ‘பளிச்’சென்று பிரகாசிக்கும். சிலருக்கு கூந்தல் செம்பட்டை நிறத்தில் இருக்கும். கருகருவென்று இல்லையே என்று கவலைப்படுவார்கள். அவர்களுக்கான எளிய வைத்தியம் இது! உ.பருப்பு & அரை டீஸ்பூன், கறிவேப்பிலை & 10. இவற்றைப் புளித்த மோரில் ஊறவைத்து அரையுங்கள். இந்த பேஸ்ட்டை தலையில் ‘பேக்’ ஆகப் போட்டு 10 நிமிடம் கழித்து அலசுங்கள். வாரம் ஒருமுறை இதைச் செய்து வர, கூந்தல் கருகருவென்றாகும். நீளக் கூந்தல் பிரியையா நீங்கள்? உங்களுக்கே உங்களுக்கான அசத்தல் சிகிச்சை இது. இதற்கு உளுந்துகூடத் தேவையில்லை... இட்லி, தோசைக்கு ஊறவைத்த உ.பருப்பின் தண்ணீரே போதுமானது! கொட்டை நீக்கிய நெல்லிக்காய் & 2, செம்பருத்தி இலை & 5. இந்த இரண்டையும் அரைத்து இதனுடன் வெந்தய பவுடர் & 1 டீஸ்பூன் சேர்த்து உ.பருப்பு ஊறவைத்த தண்ணீரையும் கலந்துகொள்ளுங்கள். இதை தலையில் ‘பேக்’ ஆகப் போட்டு உலர்ந்ததும் அலசுங்கள். வாரம் ஒருமுறை தொடர்ந்து செய்துவர, தலை முடியின் வேர்ப் பகுதிகளில் வளர்ச்சி தூண்டப்பட்டு கூந்தல் நீளமாக வளரத் தொடங்கும். உ.பருப்பு கழுவிய தண்ணீரே நுரைத்து, ஷாம்பு மாதிரி அழுக்கை நீக்குவதால் தனியே ஷாம்பு போடவேண்டிய அவசியமில்லை என்பது இதன் கூடுதல் சிறப்பு! நெற்றியில் ஸ்டிக்கர் பொட்டு வைப்பதால் சிலருக்கு அலர்ஜியாகி, நாளடைவில் நெற்றிப் பகுதியில் அரிப்பும் கரும்புள்ளியும் ஏற்பட்டு, அந்த இடமே புண்ணாகிவிடும். அவர்களுக்கான அருமருந்து இந்த பவுடர். வறுத்த உ.பருப்பு & 100 கிராம், கொட்டை நீக்கிய புங்கங்கொட்டை & 10, கொட்டை நீக்கிய கடுக்காய் தோல் & 5. இவற்றை மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக்கொள்ளுங்கள். இந்தப் பொடியை தினமும் குளிப்பதற்கு முன் தண்ணீரில் குழைத்து, அரிப்பு இருக்கிற பகுதியில் தேய்த்துக் கழுவிவர, அரிப்பும் கருமையும் ஓடிப்போகும். ‘பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா’வாகப் பிரகாசிப்பீர்கள். கண்ணுக்குக் கீழே கருவளையம் விழுந்து எப்போது பார்த்தாலும் ‘கவலைக்குரிய’ மனுஷியாகக் காணப்படுகிறீர்களா? உங்கள் கவலையைப் போக்குகிறது உ.பருப்பு! 2 துண்டு வெள்ளரிக்காயில், 2 முழு உ.பருப்பை 1 மணி நேரம் ஊறவைத்து அரையுங்கள். இதை தினமும் கண்களைச் சுற்றிலும் பூசி, 3 நிமிடம் கழித்து அலசுங்கள். வெள்ளரிக் காய், கருவளையத்தைப் போக்கி ‘ப்ளீச்' செய்யும். உ.பருப்பு, கண்களுக்குக் கீழே இருக்கிற தோலின் முரட்டுத்தனத்தைப் போக்கி, தோலை மென்மையாக்கும். முகத்தில் சுருக்க வரிகள் தோன்றி கவலைப்படுத்துகிறதா? மனம் சுருங்கவேண்டாம். கசகசா & அரை டீஸ்பூன், வெந்தயம் & கால் டீஸ்பூன், முழு உ.பருப்பு&4. இவற்றை ரவைபோல் அரைத்துக்கொள்ளுங்கள். இதனுடன், கஸ்தூரி மஞ்சள் & ஒரு சிட்டிகை கலந்து பேஸ்ட்டாக்குங்கள். வாரம் ஒருமுறை இந்த பேஸ்ட்டால் முகத்தில் 5 நிமிடம் மசாஜ் செய்து வாருங்கள். சுருக்கம் முற்றிலுமாக நீங்கி, முகம் படு இளமையாகிவிடும். முகப் பருக்கள்... பலருக்கும் மிகப் பெரிய பிரச்னை. இந்தப் பருக்களுக்கும் ‘பை’ சொல்லலாம் உ.பருப்பின் உதவியுடன். புதினா சாறு & 1 டீஸ்பூன், வறுத்து அரைத்த உ.பொடி & 1 டீஸ்பூன், சந்தனம் & கால் டீஸ்பூன். இவற்றைக் கலந்து பேஸ்ட்டாக்குங்கள். பருக்களின்மேல் இந்த பேஸ்ட்டைப் பூசி, உலர்ந்ததும் கழுவி வாருங்கள். இரண்டு நாட்களுக்கு ஒருமுறை இந்த சிகிச்சையைத் தொடர்ந்து செய்துவந்தால் பருக்கள் உதிர்ந்து, முகம் பளிங்குபோல் ஆகிவிடும். சிலரது உதடுகள் கறுப்பு லிப்ஸ்டிக் போட்டது போல இருக்கும். அவர்களுக்கு ரோஜா இதழ்களை வாக்களிக்கிறது உ.பருப்பு. வறுத்து அரைத்த உ.மாவு 1 சிட்டிகையுடன் 1 சொட்டு தேன் கலந்து பேஸ்ட்டாக்குங்கள். இந்த பேஸ்ட்டை உதட்டில் தடவி 5 நிமிடம் கழித்து மிதமான வெந்நீரில் கழுவுங்கள். நாளடைவில், உதடுகள் ரோஜா நிறமாவதுடன், மென்மையாகவும் ஆகும். கால்களில் பாளம் பாளமாக பித்த வெடிப்புகள் இருக்கின்றனவா? இந்த சிகிச்சையைச் செய்து பாருங்களேன்... வெள்ளை ரவை - அரை டீஸ்பூன், உளுத்தம் பருப்பு - அரை டீஸ்பூன். இந்த இரண்டையும் ரவை மாதிரி பொடித்து அதில் எலுமிச்சை சாறை கலந்து பேஸ்ட்டாக்குங்கள். இரவு படுப்பதற்கு முன் இந்த பேஸ்ட்டை வெடிப்பின் மேல் தேய்த்து, உலர்ந்ததும் கழுவுங்கள். பிறகு பாதத்தைத் துடைத்துவிட்டு, சிறிது கிளிசரின் தடவுங்கள். நாலைந்து நாட்கள் இதைத் தொடர்ந்து செய்துவந்தால், பித்த வெடிப்பு, சேற்றுப் புண் போன்றவை இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும். காலும் மெத்தென்று இருக்கும். குழந்தை பிறந்த பிறகு வயிற்றில் ஏற்படுகிற ‘ஸ்ட்ரெச் மார்க்’குகள் பல பெண்களின் தீராத கவலை. அதற்கும் தீர்வு வைத்திருக்கிறது உ.பருப்பு! வறுத்து அரைத்த உ.மாவு & 1 டீஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் தூள் & 1 டீஸ்பூன். இந்த இரண்டையும், உளுந்து ஊறவைத்த தண்ணீருடன் கலந்துகொள்ளுங்கள். இந்தக் கலவையை வயிற்றில் ‘பற்று’ மாதிரி போட்டு 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். வரிகள் மறைவதுடன் அரிப்பும் ஓடியே போகும். குறிப்பு: உ.பருப்புப் பொடிகளை தயாரித்து, பல நாட்கள் வைத்து உபயோகிக்கக் கூடாது. உடனடியாகப் பயன்படுத்தவேண்டும். அவ்வப்போது கொஞ்சமாக அரைக்கவேண்டும் என்பதால் இவற்றை அரைப்பதற்கென்றே தனியாக ஒரு சிறு அம்மியை வைத்துக் கொள்வது நல்லது.

Related

ஹெல்த் ஸ்பெஷல் 3776117618299321687

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item