சமையல் குறிப்புகள்! பனீர் வெஜ் ரோல்
பனீர் வெஜ் ரோல் தேவையானவை: துருவிய பனீர் & அரை கப், துருவிய கோஸ், குடமிளகாய், கேரட், வெங்காயம் & 1 கப், பச்சைமிளகாய் (பொடியாக நறுக...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_8064.html
பனீர் வெஜ் ரோல்
தேவையானவை: துருவிய பனீர் & அரை கப், துருவிய கோஸ், குடமிளகாய், கேரட், வெங்காயம் & 1 கப், பச்சைமிளகாய் (பொடியாக நறுக்கியது) & 2, மல்லித்தழை & சிறிது, மைதாமாவு & ஒரு கப், கார்ன்ஃப்ளார் & அரை கப், கரம் மசாலாத்தூள் & அரை டீஸ்பூன். எண்ணெய், உப்பு & தேவையான அளவு.
செய்முறை: கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்கறி கலவை, பச்சைமிளகாய், கரம் மசாலாத்தூள், மல்லித்தழையைப் போட்டு லேசாக வதக்கவும். கடைசியாக பனீரைப் போட்டுக் கிளறி இறக்கவும். மைதாமாவு, கார்ன்ஃப்ளார் இரண்டையும் சிறிது உப்பு சேர்த்து கலந்து, தண்ணீர் விட்டுக் கெட்டியாகப் பிசையவும். மாவை நீள வாக்கில் இட்டு உள்ளே காய்கறிக் கலவையை வைத்து மேல்முனையை லேசாக உட்புறமாக மடித்து பின்னர் சுருட்டி மடிக்கவும். எல்லாவற்றையும் இதே போன்று மடித்து வைத்துக் கொண்டு கடைசியாக எண்ணெயில் பொரித் தெடுக்கவும்.
பனீர் வெஜ் ரோல்: காய்கறி கலவைக்குப் பதிலாக தேங்காய் துருவலை வறுத்து, அதனுடன் உலர்பழங்களைச் சேர்த்து கலந்து, மடித்து ஸ்வீட் ரோலாகவும் செய்யலாம்.
Post a Comment