ஆரோக்கிய சமையல்! முள்ளங்கி - பூசணி சப்பாத்தி
முள்ளங்கி - பூசணி சப்பாத்தி தேவையானவை: கோதுமை மாவு - 2 கப், முள்ளங்கி துருவல் - கால் கப், பூசணி துருவல் - அரை கப், பச்சைமிளகாய் விழுது - ஒ...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_7413.html
முள்ளங்கி - பூசணி சப்பாத்தி
தேவையானவை: கோதுமை மாவு - 2 கப், முள்ளங்கி துருவல் - கால் கப், பூசணி துருவல் - அரை கப், பச்சைமிளகாய் விழுது - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி விழுது - 2 டீஸ்பூன், சீரகத்தூள் - அரை டீஸ்பூன், இஞ்சி விழுது - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - 3 டீஸ்பூன்.
செய்முறை: முள்ளங்கி துருவலை லேசாக பிழிந்து கொள்ளவும். பூசணி துருவலை நன்றாக பிழிந்து கொள்ளவும். கோதுமை மாவுடன் முள்ளங்கி துருவல், பூசணி துருவல், பச்சைமிளகாய் விழுது, கொத்தமல்லி விழுது, இஞ்சி விழுது, சீரகத்தூள், உப்பு சேர்த்து சப்பாத்திக்கு பிசைவது போல் பிசைந்து கொள்ளவும்.
இந்த மாவில் சிறிது எடுத்து சிறிய சப்பாத்திகளாக இட்டு, சூடான தோசைக்கல்லில் போடவும். மிதமான தீயில் வேக விட்டு எடுத்துப் பரிமாறவும். இதற்கு தால் அல்லது தயிர் பச்சடியைத் தொட்டுக் கொள்ளலாம்.
முள்ளங்கி - பூசணி சப்பாத்தி: பொதுவாக காய்கறிகளில் கலோரி குறைவாக இருப்பதால் சாப்பிட்ட உணர்வே இருக்காது. ஆனால், காய்கறிகளை இப்படி சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடுவதால் வயிறு நிரம்பி இருப்பதுடன் உடல் எடையும் குறையும்.
Post a Comment