ஆரோக்கிய சமையல்! முள்ளங்கி கீரை சப்ஜி
முள்ளங்கி கீரை சப்ஜி தேவையானவை: நடுவில் உள்ள நரம்பை நீக்கி, அலசி பொடியாக நறுக்கிய முள்ளங்கி கீரை & ஒரு கப், தக்காளி & 1, சீரகத்தூள...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_731.html
முள்ளங்கி கீரை சப்ஜி
தேவையானவை: நடுவில் உள்ள நரம்பை நீக்கி, அலசி பொடியாக நறுக்கிய முள்ளங்கி கீரை & ஒரு கப், தக்காளி & 1, சீரகத்தூள், மஞ்சள்தூள், தனியாதூள் & தலா கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் & அரை டீஸ்பூன், உப்பு & தேவையான அளவு, எண்ணெய் & ஒரு டீஸ்பூன்.
செய்முறை: தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் குறைந்த தீயில் கீரையை போடவும். கீரை பாதி அளவு வெந்ததும் அதில் தக்காளி, மிளகாய்த் தூள், சீரகத்தூள், மஞ்சள்தூள், தனியாதூள், சிறிது உப்பு சேர்த்து மூடி வைத்து நன்கு வேக விடவும். தக்காளி கரைந்து கீரை நன்கு வெந்ததும் இதை சூடாக கம்பு அடை யுடன் சப்பாத்தி அல்லது சாதத்துடன் கலந்து சாப்பிடலாம்.
Post a Comment