பூண்டு ஒரு சிறந்த மருந்து!

வியாதிகளை விரட்ட பூண்டு ஒரு சிறந்த மருந்து! ஒரு பூண்டுப் பல் தினமும் சாப்பிட, டாக்டரிடம் போக அவசியமே ஏற்படாது என்பார்கள். பூண்டு மிகச் சி...

வியாதிகளை விரட்ட பூண்டு ஒரு சிறந்த மருந்து! ஒரு பூண்டுப் பல் தினமும் சாப்பிட, டாக்டரிடம் போக அவசியமே ஏற்படாது என்பார்கள். பூண்டு மிகச் சிறந்தது, உடல் ஆரோக்கியத்திற்கு. உடம்பில் கொழுப்பு அதிகம் இருப்பவர்கள் தினமும் இரவில் படுக்கும் முன்பு ஒரு பூண்டுப் பல் பச்சையாகவே கடித்து மென்று சாப்பிட கொழுப்பு போயே போய் விடும்! தினமும் தவறாது நாட்கணக்காக, மாதக்கணக்காகச் சாப்பிட வேண்டும், இது எனது சுய அனுபவம். அனேகப் பேருக்கு பூண்டின் வாசனைப்பிடிக்காது. அதுவும் பச்சையாக மென்றுச் சாப்பிட பூண்டின் வாசனை அதிகமாகவே இருக்கும். பூண்டு சாப்பிடுபவர்களின் வியர்வையில் கூட வாசனை நன்கு தெரியும். ஆனால் அநேக வியாதிகளை விரட்ட பூண்டு ஒரு சிறந்த மருந்து. * 'மூலம்' உள்ளவர்கள் பூண்டு சாப்பிட நாளடைவில் சிறந்த குணம் காணலாம். * இரத்தத்தை சுத்தம் செய்யக் கூடியது பூண்டு. * உடம்பில் உள்ள நச்சுப் பொருட்கள் அழியவும் பூண்டு உதவும். * பிரசவித்த பெண்மணிகளுக்கு சிறந்த வரப்பிரசாதம். நெய்யில் வதக்கி நன்கு வேகவைத்து உணவில் சேர்த்துக் கொள்ள பிறந்த குழந்தைக்குத் தாய்ப்பால் அதிகமாகவே கிடைக்கும். பூண்டு உரித்து நன்கு வதக்கி (நெய்யில்) பாலில் கலந்து இரவு தூங்கப் போகும் முன்பு குடித்தால் நன்கு உறக்கம் வரும். பூண்டு வாசனை பிடிக்காதவர்களுக்கு பூண்டை வெண்ணெயில் சிறிது (ஒரு சிமிட்டா உப்பு) உப்பு சேர்த்து வதக்க அதன் துர்வாசனை போயே போய்விடும். சமையலில் முக்கியமாக புலாவ், சன்னா, குருமா, கோப்தா, பூண்டு ரசம் கோபி மஞ்சூரியன் என அநேக உணவு வகைகளில் பூண்டை சேர்த்துக் கொள்ள அதன் ருசியே அலாதிதான். பூண்டை எளிதாக உரிப் பதற்கு : வெறும் வாணலியில் எண்ணெய் விடாது வறுத்து ஆறியபின் கையில் தேய்த்தால் தானே எளிதில் உரிக்கலாம். தண்ணீரில் பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் (வெதுவெதுப்பான நீர்) ஊற வைத்து உரித்தால் இன்னும் சுலபம். உரித்த பூண்டை வெகு நேரம் திறந்து வெளியே வைக்கக் கூடாது. அதன் உணவுச் சத்து குறைந்துவிடும். கசந்தும் போய்விடும். நமக்குத் தேவையான சமயத்தில் உரித்து உபயோகிக்க வேண்டும். உரித்த பூண்டு கெடாதிருக்க வினீகரில், ஒரு கண்ணாடி ஜாடியில், போட்டு வைத்தால் நிறைய நாட்கள் கெடாதிருக்கும். பூண்டை சிவக்க வறுத்து சமையல் செய்ய அதன் ருசி கூடும்.

Related

மருத்துவ டிப்ஸ் 8311016585017087216

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item