சமையல் சந்தேகங்கள்--மொறுமொறு கட்லெட்டுக்கு...
மொறுமொறு கட்லெட்டுக்கு... ‘‘நான் கட்லெட் செய்யும் போதெல்லாம், எண்ணெய் ஊறியது போல் ‘சதசத’வென ஆகிவிடுகிறது. ஹோட்டல்களில் வாங்குவது போல, மேல்ப...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_6966.html
மொறுமொறு கட்லெட்டுக்கு...
‘‘நான் கட்லெட் செய்யும் போதெல்லாம், எண்ணெய் ஊறியது போல் ‘சதசத’வென ஆகிவிடுகிறது. ஹோட்டல்களில் வாங்குவது போல, மேல்புறம் மொறுமொறுப்பாக இருப்பதில்லை. அந்த மாதிரி கட்லெட் வருவதற்கு, எப்படி வேகவைக்க வேண்டும்? நான் தோசைக்கல்லில்தான் வேகவைக்கிறேன். என் தோழி, எண்ணெயைக் காயவைத்துப் பொரிக்க சொல்கிறாள். எது சரி?’’
‘‘இரண்டு வகையிலுமே கட்லெட்டை வேக வைக்கலாம். கட்லெட்டுக்கான மசாலாவை தயாரித்துக் கொண்டு, தேவையான வடிவில் கட்லெட் செய்து, கரைத்து வைத்திருக்கும் மைதாமாவில் போட்டு எடுத்து, பிரெட் தூளில் புரட்டிக்கொள்ளுங்கள்.
எண்ணெய் அதிகம் சேர்க்காமல், டயட்டில் இருப்பவர்கள் (அதாவது கலோரி கணக்கு பார்த்து சாப்பிடுபவர்கள்), தோசைக்கல்லை காயவைத்து, அதில் கட்லெட்டைப் போட்டு, சுற்றிலும் எண்ணெய் ஊற்றி, நன்கு வெந்ததும் திருப்பி வேகவிட்டு எடுக்கலாம். ஆனால் அந்த முறையில் அவ்வளவு மொறுமொறுப்பு வராதுதான்.
வாணலியில் எண்ணெயை நன்கு காயவைத்து, அதில் கட்லெட்டுகளைப் போட்டு, மொறுமொறுப்பாக வெந்ததும் எடுக்கலாம். இந்த முறையில் செய்தால்தான் ஹோட்டல் கட்லெட் போல, மேல்புறம் மொறுமொறு வென்று இருக்கும். ஆனால், எண்ணெய் நன்றாகக் காயவேண்டும் என்பது முக்கியம். இல்லையெனில், எண்ணெய் குடித்தது போல, ஊறி ‘சதசத’வென்றுதான் இருக்கும்’’.
Post a Comment