கைமணம்! சன்னா முறுக்கு
சன்னா முறுக்கு தேவையானவை: வெள்ளை கொண்டைக்கடலை & 2 கப், அரிசிமாவு & ஒரு கப், காய்ந்த மிளகாய் & 6, எள்ளு & 2 டீஸ்பூன், வெண்ண...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_6893.html
சன்னா முறுக்கு
தேவையானவை: வெள்ளை கொண்டைக்கடலை & 2 கப், அரிசிமாவு & ஒரு கப், காய்ந்த மிளகாய் & 6, எள்ளு & 2 டீஸ்பூன், வெண்ணெய் & கொட்டைப்பாக்கு அளவு, உப்பு & தேவையான அளவு, பெருங்காயம் & அரை டீஸ்பூன், எண்ணெய் & இரண்டரை கப்.
செய்முறை: சன்னாவை 12 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, ஊறிய சன்னா, மிளகாய், பெருங்காயம், உப்பு.. இவற்றை நைஸாக அரைக்கவும். அரைத்த விழுதில் அரிசி மாவு, எள்ளு, வெண்ணெய் ஆகியவற்றைச் சேர்த்து கெட்டியாக முறுக்கு மாவு பதத்தில் பிசைந்துகொள்ளவேண்டும். முறுக்கு அச்சில் இந்த மாவை நிரப்பி, எண்ணெயைக் காயவைத்து முறுக்குகளாகப் பிழியவும். பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.
சன்னா முறுக்கு: காய்ந்த மிளகாய்க்கு பதிலாக பச்சை மிளகாய் கூட அரைத்துச் சேர்க்கலாம். அரிசி மாவையும் உங்கள் விருப்பத்துக்கேற்ப கூட்டியோ குறைத்தோ போடலாம்.
Post a Comment