சமையல் குறிப்புகள்! ஸ்பெஷல் சிக்கன் கறி!
ஸ்பெஷல் சிக்கன் கறி! தேவையான பொருட்கள் : சிக்கன் - ½ கிலோ, சிக்கன் மசாலா - 1 பாக்கெட், காய்ந்த மிளகாய் - 15, இஞ்சி -10 கிராம், பூண்டு - 1...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_5817.html
ஸ்பெஷல் சிக்கன் கறி!
தேவையான பொருட்கள் :
சிக்கன் - ½ கிலோ,
சிக்கன் மசாலா - 1 பாக்கெட்,
காய்ந்த மிளகாய் - 15,
இஞ்சி -10 கிராம்,
பூண்டு - 10 பல்,
தக்காளி - 4,
வெங்காயம் - 2 சிறியது,
நல்லெண்ணெய் - 200 கிராம்,
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
தாளிக்க : கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு, புதினா, கறிவேப்பிலை தேவையான அளவு
செய்முறை :
தக்காளி, வெங்காயம், பூண்டு, இஞ்சி இவற்றைத் தனித்தனியாக மைய அரைத்துக் கொள்ளவும்.
சிக்கனைச் சுத்தப்படுத்தி, அதில் சிக்கன் மசாலா, சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி ¼ மணி நேரம் வைக்கவும்.
கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கி, தக்காளி, வெங்காய விழுதைப் போட்டு நன்கு கிளறவும். புதினாவை சேர்த்து, அதோடு ஊற வைத்த சிக்கன், இஞ்சி, பூண்டு விழுதைப் போட்டுக் கிளறவும்.
அதோடு காய்ந்த மிளகாயை இரண்டு இரண்டாகக் கிள்ளிப் போட்டு நன்கு கிளறவும். நன்கு வெந்தவுடன் இறக்கி வைக்கவும். வேறு கடாயில் மீதி எண்ணெய் விட்டு, கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு போட்டுத் தாளித்து சிக்கனில் சேர்க்கவும். காரம் தேவையெனில் மிளகுத்தூள் சேர்க்கலாம்.
---------------------------------------------------------------------------------
Post a Comment