உணவே மருந்து! வெஜிடபிள் பாசிப்பயறு இட்லி
உணவே மருந்து! வெஜிடபிள் பாசிப்பயறு இட்லி தேவையானவை: முளை கட்டிய பாசிப்பயறு & ஒரு கப், புழுங்கல் அரிசி & 2 டேபிள்ஸ்பூன், உளுந்து &a...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_5789.html
உணவே மருந்து!
வெஜிடபிள் பாசிப்பயறு இட்லி
தேவையானவை: முளை கட்டிய பாசிப்பயறு & ஒரு கப், புழுங்கல் அரிசி & 2 டேபிள்ஸ்பூன், உளுந்து & ஒரு டேபிள்ஸ்பூன், துருவிய (அ) மிகவும் பொடியாக நறுக்கிய காய்கறிகள் & அரை கப், பச்சைமிளகாய் & 2, இஞ்சி & ஒரு துண்டு, பொடியாக நறுக்கிய கொத்துமல்லி & 2 டேபிள்ஸ்பூன், உப்பு & தேவையான அளவு.
செய்முறை: அரிசி, பயறு இரண்டையும் ஒரு மணி நேரம் ஊற விடவும். ஊறியதும் பச்சைமிளகாய், இஞ்சி சேர்த்து சற்று கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். இதில் காய்கறிகள், உப்பு, கொத்துமல்லி சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இட்லித் தட்டில் சிறு சிறு இட்லிகளாக ஊற்றிப் பரிமாறவும்.
Post a Comment