வாசகிகள் கைமணம்! நெல்லிக்காய் போளி
தேவையானவை: மைதா மாவு -& ஒரு கப், நெல்லிக்காய் & 8, கடலைப்பருப்பு & அரை கப், தேங்காய் துருவல் & 1 கப், பாதாம்பருப்பு, முந்தி...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_5526.html
தேவையானவை: மைதா மாவு -& ஒரு கப், நெல்லிக்காய் & 8, கடலைப்பருப்பு & அரை கப், தேங்காய் துருவல் & 1 கப், பாதாம்பருப்பு, முந்திரிப்பருப்பு & தலா 10, ஏலக்காய் தூள் & சிறிதளவு, நெய் & கால் கப், கேசரி பவுடர் & ஒரு சிட்டிகை, வெல்லம் (பொடித்தது) & ஒரு கப்.
செய்முறை: மைதா மாவை 1 ஸ்பூன் நெய் விட்டு, கேசரி பவுடர் சேர்த்து, போளி மாவு பதத்துக்கு தண்ணீர் சேர்த்து, கெட்டியாகப் பிசைந்து 1 மணி நேரம் ஊற விடவும். நெல்லிக்காயை கொதிக்கும் தண்ணீரில் போட்டு மூடி வைத்து, ஆறியவுடன் எடுத்து கொட்டை நீக்கவும். அதன் பிறகு, நெல்லிக்காயை தண்ணீர் விடாமல் நன்கு அரைத்து வைத்துக் கொள்ளவும்.
வெல்லத்தில் சிறிது தண்ணீர் விட்டு, கொதிக்கவிட்டு வடிகட்டவும். கடலைப் பருப்பை சிவக்க வறுத்து, ஊறவைத்து வேகவிட்டு, எடுத்துக்கொள்ளவும். அந்தப் பருப்புடன், தேங்காய் துருவல் சேர்த்து கெட்டியாக அரைக்கவும். பின்பு நெல்லிக்காய் அரைத்த விழுது, கடலைப்பருப்பு&தேங்காய் விழுது, வெல்லப்பாகு சேர்த்து கெட்டியாக பூரணம் தயார் செய்து, ஏலப்பொடி போட்டு கிளறி சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
ஒரு வாழை இலையில் சிறிது நெய் தடவி, மைதா மாவை சிறிய வட்டமாக இட்டு, பூரணம் வைத்து மூடி போளியாக தட்டவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து, தோசைக்கல்லில் நெய் விட்டு, போளிகளை சுட்டெடுக்கவும்.
நெல்லிக்காய் போளி: நெல்லிக்காயை குக்கரில் வைத்து, ஒரு விசில் விட்டு இறக்கினால் ஈஸியாக மசிக்கலாம். சத்தும் வீணாகாது.
Post a Comment