சமையல் குறிப்புகள்! சுண்டைக்காய் துவையல் சுவையாக இருக்கும்.
சுண்டைக்காய் துவையல் தேவையான பொருட்கள் : பிஞ்சு சுண்டைக்காய் - 5 சிறிய வெங்காயம் - 5 தேங்காய்த் துருவல் - சிறிது பெருங்காயம் - சிறிய துண்ட...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_5314.html
சுண்டைக்காய் துவையல்
தேவையான பொருட்கள் :
பிஞ்சு சுண்டைக்காய் - 5
சிறிய வெங்காயம் - 5
தேங்காய்த் துருவல் - சிறிது
பெருங்காயம் - சிறிய துண்டு
உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
மிளகாய் வற்றல்- 5
புளி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
சுண்டைக்காயை கீறிவிட்டு கழுவி வதக்கி வைத்துக் கொள்ளவும். வெங்காயம், தேங்காயை தனியாக வதக்கி, இதனுடன் வறுத்த பெருங்காயம், உளுத்தம் பருப்பு, மிளகாய், வதக்கிய சுண்டைக்காய், புளி, உப்பு இவற்றை மிக்ஸியில் போட்டு தண்ணீர் விடாமல் அரைக்கவும்.
இந்தத் துவையல் சாப்பாட்டிற்கும், இட்லிக்கும் தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும்.
--------------------------------------------------------------------------------------------------------
Post a Comment