ரெசிப்பிஸ் கைமணம்! வாழைப்பூ எள் கறி
வாழைப்பூ எள் கறி தேவையானவை: ஆய்ந்து நறுக்கிய வாழைப்பூ - ஒரு கப், வெள்ளை எள் - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, உளுத்தம்பருப்பு, கடலைப்பரு...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_5170.html
வாழைப்பூ எள் கறி
தேவையானவை: ஆய்ந்து நறுக்கிய வாழைப்பூ - ஒரு கப், வெள்ளை எள் - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 2 டீஸ்பூன், தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன், கடுகு - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் காய்ந்ததும் எள், காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பை சேர்த்து சிவக்க வறுத்துக் கொள்ளவும். அதில் உப்பு சேர்த்து பொடித்துக் கொள்ளவும்.
வாழைப்பூவை வேக வைத்துக் கொள்ளவும். கடாயில் இரண்டு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு தாளித்து, வெந்த வாழைப்பூ, தேங்காய் துருவலை போட்டு வதக்கவும்.
செய்து வைத்துள்ள எள்பொடியை சேர்த்துக் கிளறி, மல்லித்தழை, கறிவேப்பிலை தூவி பரிமாறவும்.
வாழைப்பூ எள் கறி: வாழைப்பூவுடன் ஒரு பிடி முருங்கை கீரையை சேர்த்து செய்தால் சத்தும் சுவையும் இன்னும் கூடுதலாக இருக்கும்.
--------------------------------------------------------------------------------
Post a Comment