கைமணம்! அள்ளும் சுவையில் எள்ளுமா உருண்டை
எள்ளுமா உருண்டை தேவையானவை: வெள்ளை எள் & ஒரு கப், வெள்ளை உளுந்து & அரை கப், சர்க்கரை & முக்கால் கப். செய்முறை: எள், உளுந்து இரண...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_515.html
எள்ளுமா உருண்டை
தேவையானவை: வெள்ளை எள் & ஒரு கப், வெள்ளை உளுந்து & அரை கப், சர்க்கரை & முக்கால் கப்.
செய்முறை: எள், உளுந்து இரண்டையும் தனித்தனியே வறுத்து பொடித்துக் கொள்ளவும். சர்க்கரையையும் பொடி செய்து, மூன்றையும் ஒன்றாகக் கலந்து கொள்ளவும். பிறகு கொதி நீரை சிறிது சிறிதாக ஊற்றிக் கிளறி உருண்டை களாகப் பிடிக்கவும்.
மாலை நேர சிற்றுண்டிக்கு ஏற்றது. ருசியும் சத்தும் நிறைந்தது.
வாசகிகளின் குறிப்புகளை தேர்ந்தெடுத்து, சமைத்து, ருசித்து, சர்டிஃபிகேட் தந்திருப்பவர் ‘சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணன். அவருடைய கமென்ட்ஸ்..
நெல்லிக்காய் அல்வா: வெல்லத்துக்குப் பதில் சர்க்கரையும், சிறிது குங்குமப்பூவும் சேர்த்து செய்தால் இன்னும் சுவையாக இருக்கும்.
பனீர் வெஜ் ரோல்: காய்கறி கலவைக்குப் பதிலாக தேங்காய் துருவலை வறுத்து, அதனுடன் உலர்பழங்களைச் சேர்த்து கலந்து, மடித்து ஸ்வீட் ரோலாகவும் செய்யலாம்.
எள்ளுமா உருண்டை: வேர்க்கடலையை ஒன்றிரண்டாகப் பொடித்து கலவையில் போட்டு உருண்டைகள் பிடித்தால் கூடுதல் சுவையோடு இருக்கும்.
------------------------------------------------------------------------
Post a Comment