கொங்கு நாட்டுச் சமையல்! பேனி யன்.
பேனி யன். தேவையான பொருள்கள்: மைதா அரை கிலோ டால்டா 100 கிராம் நெய் 100 கிராம் பொடித்த சர்க்கரை 1 கிலோ அரிசி மாவு கால் கிலோ எண்ணெய் கால்...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_5.html
பேனி யன்.
தேவையான பொருள்கள்:
மைதா அரை கிலோ
டால்டா 100 கிராம்
நெய் 100 கிராம்
பொடித்த சர்க்கரை 1 கிலோ
அரிசி மாவு கால் கிலோ
எண்ணெய் கால் கிலோ
ஏலக்காய் 25 கிராம்
செய்முறை:
முதலில் மைதா, டால்டா, நெய், எண்ணெய்,
அரை கிலோ சர்க்கரையை சிறிது தண்ணீர் சேர்த்து,
சப்பாத்தி மாவு போல் மென்மையாக பிசைந்து கொள்ளவும்.
பின்னர் அதனை சமமான அளவு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.
சப்பாத்தி கல்லில் இட்டு மிகவும் மெல்லிய அப்பளமாக தேய்த்து கொள்ளவும்.
அரிசி மாவு, நெய், டால்டாவை சேர்த்து வெண்ணெய் போல குழைத்துக் கொள்ளவும்.
அந்த கலவையை அப்பளத்துக்குள் வைத்து சீராக தடவவும்.
அப்பளத்தை முன்னும் பின்னுமாக மடித்து பரோட்டாவுக்கு சுருட்டுவது போல் சுருட்டவும்.
பிறகு அதனை கனமாக ஒரே பக்கம் தேய்த்துக்கிட்டு
எண்ணெய்யில் நிறம் மாளாமல் பொரித்தெடுக்கவும்.
பின்பு பொடியாக்கிய மீதி சர்க்கரையில்
ஏலக்காயக பொடியை கலந்து அதில் புரட்டி எடுக்கவும்.
பேனியன் தயார்.
Post a Comment