சமையல் குறிப்புகள்! ஓலன்
தேவையானபொருட்கள்: பெரிய துண்டுகளாக நறுக்கப்பட்ட வெள்ளைப் பூசணி-250 கிராம், தேங்காய்ப்பால்-1½ கப், கீறிய பச்சை மிளகாய்-6, வேக வைத்த சிவப்பு க...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_4973.html
தேவையானபொருட்கள்: பெரிய துண்டுகளாக நறுக்கப்பட்ட வெள்ளைப் பூசணி-250 கிராம், தேங்காய்ப்பால்-1½ கப், கீறிய பச்சை மிளகாய்-6, வேக வைத்த சிவப்பு காராமணி பருப்பு-100 கிராம், தேங்காய் எண்ணெய், உப்பு-தேவையான அளவு.
செய்முறை: தேங்காய்ப் பால் எடுக்கும் போது முதல் பால், இரண்டாம் பால், என்று தனியாக எடுத்துக் கொள்ளவும். பூசணித் துண்டுகளை இரண்டாம் பாலில், பச்சை மிளகாயுடன் சேர்த்து வேக விடவும். இதில் வெந்த பருப்பையும் போட்டு கொதிக்க விடவும். பின்னர் முதல் பால் விட்டு ஒரு கொதி வந்ததும் தேங்காய் எண்ணெய் ஊற்றி கீழே இறக்கி வைக்கவும்.
Post a Comment