தக்காளி சூப் அல்லது கிரீம் ஆப் டொமேடோ சூப்
தேவையான பொருட்கள் (சுமார் - 6 - 8 பேருக்கு) இதற்கு நாட்டுத் தக்காளி பொருந்தாது. பெங்களூர் தக்காளி சிறந்தது. பெரிய சைஸ் தக்காளி - 10 இருந்த...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_4802.html
தேவையான பொருட்கள் (சுமார் - 6 - 8 பேருக்கு)
இதற்கு நாட்டுத் தக்காளி பொருந்தாது. பெங்களூர் தக்காளி சிறந்தது.
பெரிய சைஸ் தக்காளி - 10 இருந்தால் போதும்.
கழுவி, இரண்டாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்
இத்துடன் வதக்க
பூண்டு................................- 10 பல்
ஏலக்காய்...........................- 6
பட்டை................................- 6
க்ராம்பு...............................- 6
முழு மிளகு........................- 2 வளல்
பீட்ரூட் (அ) காரட்..............- 1 துண்டு (கலருக்காக)
லீவ்ஸ்.................................- சிறிதளவு
செலரி................................- சிறிதளவு (லீவ்ஸ், செலரி என்னும் இலை வகைகள் வாசனைக்காக உபயோகப்படுத்துகிறோம். எந்தப் பெரிய கடைகளிலும் கிடைக்கும். கொத்தமல்லி, கருவேப்பிலை போல வாசனைக்காகப் போடப்படும் இலைகள்)
வெண்ணை......................- 1 மேஜைக் கரண்டி
நறுக்கிய வெங்காயம் --- 1 கப்
இததுடன் சேர்க்க
ஒயிட் சாஸ் - 1 கப்
சூப் செய்முறை
வெண்ணையை உருக்கி, பூண்டு, ஏலக்காய், பட்டை, கிராம்பு, மிளகு, பீட்ரூட், லீகஸ், செலரி முதலியவைகளை ஒவ்வொன்றாகப் போட்டு, வதக்கிப் பின் ஏலக்காய், பட்டை எல்லாம் வெடித்ததவுடன் நறுக்கிய வெங்காயத்தையும் போட்டு வதக்கவும்.
வெங்காயம் பிங்க் கலர் ஆனதும் நறுக்கிய தக்காளி போட்டு, வதக்கவும்.
மேல் தோல் சுருங்கிய பின், தக்காளித துண்டுகள் முங்கும் வரை தண்ணீர் விட்டு, ப்ரெஷர் குக்கரில் போட்டு, இரண்டு விசில் வரும் வரை வேக வைக்கவும்.
ஜூஸ் crusher என்று சொல்லப்படும், ஒரு கையால் சுற்றி ஜூஸ் எடுக்கும் கருவியில் போட்டால், தக்காளியின் தோல் சக்கை எல்லாவற்றையும் தவிர ஜூஸ் மட்டுமே வரும். (இது எந்த பாததிரக்கடையிலும் கிடைக்கும்) Juice Extractor என்றும் சொல்வார்கள்.
இது வீட்டில் இல்லாதவர்கள் சூப்பே செய்ய முடியாதா என்ன? என்று கேட்கிறீர்களா? கட்டாயம் செய்யலாம்.
ஒரு மத்தால் மசித்துப் பின், ஸ்டீல் வடிகட்டியில் வடிகட்டி விட்டால் தீர்ந்தது!
பின், ரெடியாக வைத்திருக்கும் தக்காளிச் சாற்றுடன், உப்பு, மிளகுத் தூள் சேர்த்துக் கொதிக்க விடவும்.
இதை இப்படியேயும் கொடுக்கலாம். பரிமாறும் முன் 1 கப் கிரீம் அல்லது பால் விட்டால் திக்காகி விடும். அல்லது, 1 கப் ஒயிட் சாஸ் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க விடவும்.
தயார் செய்த தக்காளி சூப்புடன் கலந்து ஒரு கொதி வந்தவுடன் கீழே இறக்கிப் பரிமாறவும். ஒயிட் சாஸ் சேர்ந்த எந்த சூப்பையும் கிரீம் ஆஃப் சூப் (cream of soup) என்று அழைப்போம்.
ஒயிட் சாஸ் சேர்ப்பதன் பயன்கள் என்ன?
சூப் திக்காக இருக்கும். என்ன தான் உப்பு, மிளகுத்தூள் சேர்த்தாலும், சிறிது தூக்கலாக இருக்கும் புளிப்பை அடித்து, ஒரு ரிச்சான டேஸ்டைக் கொடுககும்.
எப்படிப் பரிமாறலாம்?
கிரீம் சேர்ப்பதானால், சுட வைத்துப் பரிமாறும் முன் கடைசி நேரததில் சேர்க்க வேண்டும். பாத்திரததில் கலக்கலாம். அல்லது சூப் கிண்ணத்தில் விட்டுப் பின் கிரீம் தனித்தனியே ஒவ்பொரு டீஸ்பூன் சூப்பின் மேல் மிதக்க விடலாம். ப்ரெட் துண்டுகளை நெய்யில் பொறிதது, நெடியாக வைத்துப் பின் மேலே தூவிப் பரிமாறலாம்.
------------------------------------------------------------------------------------------------
தக்காளி சூப்-2
Tomato Soup
தேவையான பொருட்கள்:
தக்காளி-1 கிலோ
ஏலக்காய், பட்டை, கிராம்பு-தலா 6
பூண்டு-5 பல்
நறுக்கிய வெங்காயம்-1 கப்
பொடியாக நறுக்கிய லீக்ஸ் இலை, சலரி இலை (பெரிய கடைகளில் கிடைக்கும்)-சிறிதளவு
நறுக்கிய பீட்ரூட் அல்லது கேரட்(கலருக்காக)-1/4 கப்
மிளகுத்தூள்-2 டீஸ்பூன்
ப்ரஷ் க்ரில்-சிறிதளவு
நறுக்கிய தக்காளி-2
வெண்ணெய்-50 கிராம்
உப்பு-சுவைக்கேற்ப
செய்முறை:
கனமான பாத்திரததில் வெண்ணெயை உருக்கி, ஏலக்காய் பட்டை கிராம்பு மிளகு போட்டு வெடிக்க விடவும். பூண்டு, வெங்காயம், லீக்ஸ், செலரி சேர்த்து வதக்கவும்.
அத்துடன் பீட்ரூட், தக்காளித் துண்டுகளை நன்கு வதக்கி தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். இதை ஜுஸ் எக்ஸ்ட்ராக்டரில் (ஜுஸ் தனி, சக்கை தனி எனப் பிரித்து விடும்) போட்டு, ஜுஸைப் பிழிந்து எடுத்து உப்பு, மிளகுத்தூள் சேர்த்து ஒரு கொதி வர விடவும்.
ப்ரஷ் க்ரீமுடன் பரிமாற சூப்பர் டேஸ்ட் இந்த தக்காளி சூப்.
Post a Comment