வாசகிகள் கைமணம்! வெஜிடபிள் முகலாய்
தேவையானவை: கோஸ், உருளைக் கிழங்கு, கேரட், நூல்கோல், குடமிளகாய் (எல்லாமே பொடியாக நறுக்கியது), பச்சைப் பட்டாணி சேர்ந்த கலவை & 2 கப், பச்சை...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_450.html
தேவையானவை: கோஸ், உருளைக் கிழங்கு, கேரட், நூல்கோல், குடமிளகாய் (எல்லாமே பொடியாக நறுக்கியது), பச்சைப் பட்டாணி சேர்ந்த கலவை & 2 கப், பச்சை மிளகாய் & 4, தயிர், தேங்காய் துருவல் & தலா 1 கப், சீரகம், கசகசா & தலா 2 டீஸ்பூன், பட்டை &1 , இலை & சிறிது, இஞ்சி & பூண்டு விழுது, மல்லித்தழை & சிறிது, மிளகாய்தூள் & 1 டீஸ்பூன், முந்திரிப்பருப்பு & 10, பாதாம்பருப்பு & 5, மஞ்சள்தூள், உப்பு, எண்ணெய், நெய் & தேவைக்கு.
செய்முறை: காய்கறிகளை உப்பு, மஞ்சள்தூள், தயிர் போட்டு பிசறி, அரை மணி நேரம் ஊறவிடவும். தேங்காய், சீரகம், மிளகாய், கசகசா, முந்திரி, பாதாம் இவற்றை மைய அரைக்கவும். வாணலி யில் எண்ணெய் காய விட்டு பட்டை, இலை, சோம்பு, கிராம்பு இவற்றை சற்றுத் தட்டிப் போட்டு, 2 டீஸ்பூன் நெய் விடவும்.
பின் காய்கறிக் கலவை, மிளகாய்தூள் போட்டு மூடி, சிறு தீயில் வேகவிடவும். தயிர் பிரிந்து வந்ததும் அரைத்த விழுதை போட்டுக் கிளறி, சிறு தீயில் மூடி வைக்கவும். நல்ல பதம் வந்தவுடன் இறக்கி மல்லித்தழை போடவும். சாதம், சப்பாத்தி, தோசை என்று எல்லாவற்றுக்கும் பொருந்தும் இந்த கிரேவி.
வெஜிடபிள் முகலாய்: பாதாம், முந்திரி, உருளைக்கிழங்கு சேர்க்காதவர்கள் இன்னும் சில பச்சைக் காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம்.
Post a Comment