அயல்நாட்டு சமையல்!‘முட்டை சம்பல் மலேசிய ரெசிபி
தேவையானவை: முட்டை & 4, பெரிய வெங்காயம் & 2, எண்ணெய் & 4 டேபிள்ஸ்பூன், உப்பு & தேவையான அளவு, கறிவேப்பிலை & சிறிதளவு, மஞ்...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_4090.html
தேவையானவை: முட்டை & 4, பெரிய வெங்காயம் & 2, எண்ணெய் & 4 டேபிள்ஸ்பூன், உப்பு & தேவையான அளவு, கறிவேப்பிலை & சிறிதளவு, மஞ்சள்தூள் & அரை டீஸ்பூன். அரைக்க: காய்ந்த மிளகாய் & 6&லிருந்து 8, பூண்டு & 4 (மலைப்பூண்டாக இருந்தால் 4 போதும். மற்ற பூண்டாக இருந்தால் சிறிது அதிகமாக சேர்க்கலாம்).
செய்முறை: காய்ந்த மிளகாயை வெந்நீரில் சிறிது நேரம் ஊறவையுங்கள். அத்துடன் பூண்டு சேர்த்து விழுதாக அரைத்தெடுங்கள். வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக்கொள்ளுங்கள். முட்டையை உடைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து அடித்துக்கொள்ளுங்கள். இட்லிப் பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்கவைத்து, அடித்த முட்டையை ஒரு கிண்ணத்தில் ஊற்றி அதனுள் வைத்து வேகவிடுங்கள். நன்கு வெந்தவுடன் வெளியே எடுத்து, ஆறியதும் துண்டுகளாக நறுக்குங்கள்.
ஒரு கடாயில் எண்ணெயைக் காயவைத்து, அரைத்த விழுதைச் சேர்த்து சிறு தீயில் வதக்குங்கள் பச்சை வாசனை போனதும் வெங்காயம், சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு வதக்கி, அத்துடன் நறுக்கிய முட்டை துண்டுகள், கறிவேப்பிலை, தேவையான உப்பு போட்டு நன்கு கிளறி இறக்குங்கள். சுடச் சுட பரிமாறுங்கள். அவ்வளவு ருசியாக இருக்கும்!
குறிப்பு: அடித்த முட்டையை தோசை போல கனமாக ஊற்றி, அதை துண்டுகளாக நறுக்கியும் போடலாம். சமைப்பதற்கு காய்கறிகள், இறைச்சி இல்லாத நேரத்தில் இந்த ‘முட்டை சம்பலை’ செய்து வைத்துவிடுவார்கள் மலேசிய மக்கள். சுலபமாக செய்யக்கூடிய சூப்பர் மலேசிய ரெசிபி.
Post a Comment