சமையல் குறிப்புகள்! சுவையான கோதுமை பிரட் உப்புமா
சுவையான கோதுமை பிரட் உப்புமா தேவையான பொருட்கள் கோதுமை பிரட் - 8 துண்டுகள் எ�ணை - 8 டேபிள் ஸ்பூன் நெய்/ வெண்ணை - 2 டேபிள் ஸ்பூன் கடுகு - 1...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_4014.html
சுவையான கோதுமை பிரட் உப்புமா
தேவையான பொருட்கள்
கோதுமை பிரட் - 8 துண்டுகள்
எ�ணை - 8 டேபிள் ஸ்பூன்
நெய்/ வெண்ணை - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்
உடைத்த உளுத்தம் பரு�பு - 1/2 டீஸ்பூன்
வெங்காயம் - 1
தக்காளி - 1
பீன்ஸ் - 50 கிராம்
கேரட் - 1
கோஸ் - 50 கிராம்
பச்சைப்பட்டாணி - 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள்தூள்- 1/4 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 4
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - 1 டீஸ்பூன்
செய்முறை
* வாணலியில் நெய் அல்லது வெண்ணை போட்டு 2 டேபிள் ஸ்பூன் எண்ணை சேர்த்து சதுரங்களாக வெட்டிய `பிரட்' துண்டுகளை சிறிது வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
* பிறகு மீதமுள்ள எண்ணையை ஊற்றி கடுகு வெடிக்கவிட்டு உடைத்த உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து மஞ்சள்தூள், பொடியாக அரிந்த பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
* பிறகு பொடியாக அரிந்த பீன்ஸ், கேரட், கோஸ் சேர்த்து காய்கள் வெந்து வரும் வரை வதக்கவும்.
* பிறகு வறுத்த பிரட் துண்டுகளைச் சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து வதக்கவும்.
* ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி அதில் உரித்த பச்சை பட்டாணிகளை போட்டு, 2 நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கி, கோதுமை பிரட் உப்புமாவுடன் சேர்த்து சிறிது வதக்கவும்.
* அடுப்பை அணைத்து கறிவேப்பிலை தூவினால் பரிமாற உப்புமா தயார்.
குறிப்பு
கோதுமை பிரட் துண்டுகளில் உப்பு ஏற்கனவே இருக்குமாதலால் உப்பை காய்களுக்குத் தேவையான அளவு மட்டும் போடுவது அவசியம்.
Post a Comment