ரெசிப்பிஸ் கைமணம்! முளைகட்டிய பயறு கிச்சடி
முளைகட்டிய பயறு கிச்சடி தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், முளை கட்டிய பாசிப்பயறு - அரை கப், தேங்காய் துருவல் - அரை மூடி, தனியாத்தூள் - ...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_3113.html
முளைகட்டிய பயறு கிச்சடி
தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், முளை கட்டிய பாசிப்பயறு - அரை கப், தேங்காய் துருவல் - அரை மூடி, தனியாத்தூள் - 4 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, மஞ்சள்தூள் - சிறிதளவு, தண்ணீர் - ஒன்றரை கப், பொடியாக நறுக்கிய மல்லித்தழை - 4 டீஸ்பூன், முந்திரிப்பருப்பு - 8, சர்க்கரை - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: குக்கரில் சிறிது எண்ணெய் விட்டு அரிசியைப் போட்டு லேசாக வறுத்துக் கொள்ளவும். இதனுடன் மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், தேங்காய் துருவல் சேர்த்து தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். அதில் முளைகட்டிய பயறு, தனியாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்றாகக் கிளறி குக்கரை மூடி வேக விடவும். இரண்டு விசில் வந்ததும் இறக்கி, நெய்யில் வறுத்த முந்திரி, மல்லித்தழை சேர்த்துக் கலக்கவும். விருப்பப்பட்டால் சர்க்கரை கலந்தும் பரிமாறலாம்.
முளைகட்டிய பயறு கிச்சடி: அரை கப் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை வதக்கி, அதனுடன் பயறையும் லேசாக வதக்கி பிறகு அரிசியை சேர்த்து செய்தால் ருசி அபாரமாக இருக்கும்.
---------------------------------------------------------------------------------
Post a Comment