அசத்தல் சமையல்! பச்சைப் பட்டாணி பராத்தா
பச்சைப் பட்டாணி பராத்தா தேவையானவை : முழுக்கோதுமை மாவு - ½ கப், வேகவைத்த பச்சைப் பட்டாணி - ½ கப், நறுக்கிய பச்சை மிளகாய் - 1, தயிர் (கொழுப்...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_2751.html
பச்சைப் பட்டாணி பராத்தா
தேவையானவை :
முழுக்கோதுமை மாவு - ½ கப்,
வேகவைத்த பச்சைப் பட்டாணி - ½ கப்,
நறுக்கிய பச்சை மிளகாய் - 1,
தயிர் (கொழுப்பு நீக்கிய பாலில் தயாரித்த) - 1 டேபிள் ஸ்பூன்.
செய்முறை :
வேகவைத்த பச்சைப் பட்டாணியை மிக்ஸியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். கோதுமை மாவில், அரைத்த பட்டாணி விழுது, உப்பு, தயிர், ஓமம், பச்சை மிளகாய் எல்லாவற்றையும் சிறிது தண்ணீர் சேர்த்துப் பிசையவும். 5 உருண்டைகள் செய்து அவற்றை ரொட்டியாக இட்டு நான்-ஸ்டிக் தோசைக்கல்லில் மிதமான தீயில் இருபுறமும் வேகவிட்டு எடுத்து எண்ணெயைத் தடவவும்.
--------------------------------------------------------------------------------------------------------------------
Post a Comment