சமையல் குறிப்புகள்வேப்பம்பூ பச்சடி:வேப்பம்பூ துவையல்:வேப்பம்பூ பொடி...

வேப்பம்பூ பச்சடி: தேவையான பொருட்கள்: வேப்பம்பூ - 50 கிராம் புளி - சிறிய எலுமிச்சை அளவு (அல்லது வேகவைத்த சிறிய மாங்காய்) வெல்லம் - 2 மேஜைக...

வேப்பம்பூ பச்சடி: தேவையான பொருட்கள்: வேப்பம்பூ - 50 கிராம் புளி - சிறிய எலுமிச்சை அளவு (அல்லது வேகவைத்த சிறிய மாங்காய்) வெல்லம் - 2 மேஜைக்கரண்டி கடுகு, காய்ந்த மிளகாய் - தாளிக்கும் அளவுக்கு எண்ணை - ஒரு தேக்கரண்டி. செய்முறை: புளியை கரைத்து வெல்லம் கலந்து கொதிக்க வைக்க வேண்டும். வேப்பம்பூவை சிறிது நெய்விட்டு நன்கு வதக்கி கலந்து விடவும். கடுகு, காய்ந்தமிளகாய் இரண்டையும் சேர்த்து தாளித்து வேப்பம்பூவில் விடவும். புளிக்கு பதிலாக வேக வைத்த மாங்காயில் வெல்லம் கலந்தும் செய்யலாம். --------------------------------------------------------------------------------------------- வேப்பம்பூ ரசம்: தேவையான பொருட்கள்: வேப்பம்பூ - 50 கிராம் வேக வைத்த துவரம்பருப்பு - 2 மேசைக்கரண்டி(கரைத்துக் கொள்ளவும்) புளி - சிறிய எலுமிச்சை அளவு ரசப்பொடி - 2 தேக்கரண்டி கடுகு, சீரகம், கறிவேப்பிலை - தாளிக்க பெருங்காயம், உப்பு - தேவையான அளவு. செய்முறை: புளியைக் கரைத்து, ரசப்பொடி கலந்து நன்றாக கொதிக்க விடவும். அதில் பருப்பு, தண்ணீரை சேர்த்து, வேப்பம்பூவை வதக்கி, அதில் கலந்து... பின்னர் தாளிக்கவும். உப்பு, பெருங்காயம் கலந்து இறக்கவும். இதை சாப்பாட்டிற்கு முன்னால் சூப்பாகவும் குடிக்கலாம். வாரம் ஒரு தடவை இந்த ரசத்தை நம் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள புழு, பூச்சிகள் அழியும். பசியின்மை, வயிற்றுக் கோளாறுகள் நீங்கும், ஜீரண சக்தியும் அதிகரிக்கும். ----------------------------------------------------------------------------------------- வேப்பம்பூ துவையல்: தேவையான பொருட்கள்: வேப்பம்பூ - 100 கிராம் புளி - நெல்லிக்காய் அளவு காய்ந்த மிளகாய் - 4 உளுத்தம்பருப்பு - ஒரு தேக்கரண்டி பெருங்காயம், உப்பு - தேவையான அளவு நல்லெண்ணை - 2 தேக்கரண்டி. செய்முறை: வாணலியில் வேப்பம்பூ, புளி, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு ஆகியவற்றை தனித் தனியாக வறுத்துக் கொள்ளவும். உளுத்தம்பருப்பைத் தவிர்த்து, மற்ற அனைத்தையும் நன்கு அரைத்து, பின்பு உளுத்தம்பருப்பை `நறநற'வென அரைத்து சுவையுங்கள். இதை சுடுசாதம் அல்லது இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிடலாம். ------------------------------------------------------------------------------------------------ வேப்பம்பூ பொடி... தேவையான பொருட்கள்: காய்ந்த வேப்பம்பூ - 200 கிராம் உளுத்தம் பருப்பு - 50 கிராம் கொத்தமல்லி - 50 கிராம் காய்ந்த மிளகாய் - 6 முதல் 8 உப்பு, பெருங்காயப் பொடி - தேவையான அளவு செய்முறை: எல்லாவற்றையும் தனித்தனியாக வறுத்து, அரைத்து பொடி செய்து கலந்து கொள்ளவும். சூடான சாதத்தில் ஒன்று அல்லது இரண்டு கரண்டி பொடியை தூவி, சிறிது நெய் கலந்து சாப்பிட்டால் பித்த நோய்களான வாய்க்கசப்பு, வாந்தி, மயக்கம் போன்றவை நீங்கும். ------------------------------------------------------------------------------------------ வேப்பம்பூ உருண்டை... தேவையான பொருட்கள்: வேப்பம்பூ - 2 மேஜைக்கரண்டி வெல்லம் - சிறிய நெல்லிக்காய் அளவு. செய்முறை: வேப்பம்பூவை சிறிது நெய் விட்டு வறுத்து, பொடியாக்கி, வெல்லத்துடன் சேர்த்து உருண்டை செய்து கொள்ளவும். வாரம் ஒரு முறை குழந்தைகளுக்கு கொடுத்தால் வயிற்றுப்பூச்சி நீங்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். (வேப்பம்பூ பதப்படுத்தப்பட்ட நிலையில் பெரும்பாலான கடைகளில் கிடைக்கும்) ------------------------------------------------------------------------------------------------ வேப்பிலை உருண்டை (வயிற்று பூச்சி நீங்க) * வேப்பிலை கொழுந்து - ஒரு கை பிடி * ஒமம் - அரை ஸ்பூன் * கருஞ்சீரகம் - அரைஸ்பூன் * மஞ்சள் - சிறிய துண்டு * தேவையான பொருட்களை அம்மியில் வைத்து மையாக அரைத்து சிறு உருண்டை பிடித்து குழந்தையின் வாயில் போட்டு தண்ணீருடன் விழுங்கச்செய்யவும். * இது பூச்சியை வெளிக்கொணர்ந்து நல்ல பசியைத்தூண்டும். சாப்பிடாத குழந்தைகள் நன்றாக உணவு சாப்பிட ஆரம்பிப்பார்கள்.

Related

சமையல் குறிப்புகள் 8772167961378403339

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item