நாட்டு வைத்தியம்! மருத்துவ டிப்ஸ்

‘பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு மன்னர் ஆட்சி நடந்து கொண்டிருந்தபோது, எல்லா விஷயமும் தெரிந்த ராஜ வைத்தியர் ஒருவரை அந்தந்த நாட்டு மன்னர்கள் வைத்து...

‘பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு மன்னர் ஆட்சி நடந்து கொண்டிருந்தபோது, எல்லா விஷயமும் தெரிந்த ராஜ வைத்தியர் ஒருவரை அந்தந்த நாட்டு மன்னர்கள் வைத்துக் கொண்டிருப்பார்கள். மன்னருக்கோ மகாராணிக்கோ இல்லை இளவரசருக்கோ உடம்பு முடியாமல் போனால், ராஜவைத்தியர்கள் சிகிச்சை அளிப்பார்கள். அப்போது வைத்தியம் எப்படியிருந்தது? மஞ்சளும், சந்தனமும், சீரகம், மிளகு, வெந்தயம் என்று இயற்கையாக நம்மைச் சுற்றியுள்ள பொருட்களைக் கொண்டுதான். உடைந்த எலும்புகளை ஒன்றுசேர்க்க எண்ணெய் தடவி இலைகளை அரைத்து பற்றுப் போடுவார்கள். மிகுந்த ஓய்வு எடுப்பார்கள். குணமாகிவிடும். மஞ்சள் காமாலை வந்தால் கீழாநெல்லியை அரைத்து பசு மோருடன் கலந்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சரியாகிவிடும். பயணத்தின்போது அடிக்கடி வாந்தி வரும். தினசரி வெறும் வயிற்றில் நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால். அப்புறம் வாந்தியாவது, ஒண்ணாவது! ஜலதோஷம் வந்தால் மாதுளம் சாப்பிட்டு வந்தால், குணமாகிவிடும். மருத்துவ டிப்ஸ் உடல்வலி குணமாக : வில்வ இலைச் சாறு, அருகம்புல் சாறு கலந்து காலை, மாலை 1 அவுன்ஸ் சாப்பிட்டு வர, குணம் பெறலாம். ஞாபக சக்தி பெருக : வல்லாரை 150 கிராம், வசம்பு 15 கிராம் பவுடராக்கி தேனில் கலந்து உண்ணலாம். முகப் பருக்கள் ஒழிய : அல்லி இதழ்களை சந்தனத்துடன் சேர்த்து அரைத்து, இரவில் முகத்தில் பூசி காலையில் குளித்து வர ஒழியும். தும்மல் நிற்க : தூதுவளைப் பொடியில் மிளகுப் பொடி கலந்து தேனில் அல்லது பாலில் சாப்பிட நிற்கும். சதைப் பெருக்கத்திற்கு : நெல்லிக்காய் தூள் அரை ஸ்பூன் பாலில் சாப்பிட்டு வர உடல் சதைப் பிடிப்பு கூடுதலாகும். புண்கள் ஆற : கருவேல இலையை அரைத்து புண்கள் மீது கட்ட ஆறும். உடல் ஊறல் அரிப்பு குணமாக : உத்தாமணி இலைச் சாற்றினைப் பூசி காய்ந்த பின் குளித்துவர தீரும். கால் ஆணி குணமாக : வெள்ளை அருகு இலையை அரைத்து வைத்துக் கட்ட குணமாகும். தோல் வியாதி குணமாக : தகரை செடியின் வேரை எலுமிச்ச சாறு விட்டு அரைத்துப் பூச குணமாகும். நமைச்சல் தடிப்பு நீங்க : வேப்பமரத்துப் பட்டையைத் தூளாக்கி உடம்பில் பூசி, அரை மணி நேரம் கழித்து குளிக்க நீங்கும். அக்கி குணமாக : ஆலம் விழுதை சாம்பலாக்கி நல்லெண்ணெயில் குழைத்து தடவி வர குணமாகும். கட்டிகள் குணமாக : அந்திமந்தாரை இலையின் மீது ஆலிவ் எண்ணெய் தடவி அனலில் சூடுகாட்டி கட்டிகள் மீது வைத்துக் கட்ட குணமாகும். முடி நன்றாக வளர : மருதாணி இலையை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலக்கி, பச்சை நிறம் மாறாமல் காய்ச்சித் தடவி வர நன்றாக வளரும். செம்பட்டை முடி கருப்பாக : நில ஆவார இலையுடன் மருதாணி இலையைச் சேர்த்து அரைத்து தடவி வரவேண்டும். கம்பளிப் பூச்சிக் கடிக்கு : வெற்றிலையைக் கடித்த இடத்தில் வைத்து அழுத்தித் தேய்க்க குணம் பெறலாம். எலிக்கடி விஷம் முறிய : குப்பைமேனி இலையை அரைத்து, கடித்த இடத்தில் வைத்துக்கட்ட விஷம் முறியும். முகப் பொலிவிற்கு சில குறிப்புகள் : 1. முல்தானிமெட்டி பவுடரை பன்னீர் விட்டுக் கலந்து முகத்தில் தடவி, 1 மணி நேரம் ஊறிய பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். 2. பன்னீர் ரோஜா இதழ்களை அரைத்து முகத்தில் தடவி, அரை மணி ஊறிய பின் தண்ணீர் விட்டு அலம்பி வந்தால் முகம் கலர் மாறும். 3. தக்காளியை அரைத்துப் பூசி, ஊறிய பின் அலம்பினால் முகம் பொலிவு பெறும். 4. கரும்புள்ளி மறைய வேப்பங் கொழுந்தையும், மஞ்சளையும் அரைத்துப் பூசி, ஊறியபின் கழுவினால் மறைந்துவிடும். 5. கண்ணிற்கு கீழ் உள்ள கருவளையம் மறைய, உருளைக்கிழங்கை ஸ்லைசாக வெட்டி கண்ணின் மீது வைத்து வந்தால் கண் குளிர்ச்சியடையும். நாளடைவில் கருவளையம் மறைந்துவிடும். 6. முகத்தில் பூனை முடி வளர்ந்திருந்தால் அதற்கு கஸ்தூரி மஞ்சள் தூளைப் பூசி ஊறவைத்து அலம்பினால் பலன் கிடைக்

Related

நாட்டு வைத்தியம் 3135473359705657603

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item