சமையல் குறிப்புகள்! வாங்கிபாத்
வாங்கிபாத் தேவையானவை: பொடியாக நறுக்கிய கத்தரிக்காய், வடித்த சாதம் - தலா ஒரு கப், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு, தனியா - 2 டீஸ்பூன், காய்ந்...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_2566.html
வாங்கிபாத்
தேவையானவை: பொடியாக நறுக்கிய கத்தரிக்காய், வடித்த சாதம் - தலா ஒரு கப், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு, தனியா - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, கறிவேப்பிலை - சிறிது, மஞ்சள்தூள், கடுகு, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து அதில் கத்தரிக்காயை போட்டு வதக்கவும். பிறகு உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து சுருள வதக்கி இறக்கவும். சிறிது எண்ணெயில் தனியா, காய்ந்த மிளகாயை வறுத்துப் பொடிக்கவும். சாதத்தில் சிறிது உப்பு, வறுத்த அரைத்த பொடி, வதக்கிய கத்தரிக்காய், எலுமிச்சைச் சாறு என எல்லாவற்றையும் சேர்த்து நன்றாகக் கலந்து பரிமாறவும்.
Post a Comment