சமையல் குறிப்புகள்! சிற்றுண்டிகள் அடை - ஒரு வகை
சிற்றுண்டிகள் அடை - ஒரு வகை தேவைப்படும் பொருள்கள் பச்சரிசி - 250 கிராம் புழுங்கல் அரிசி - 250 கிராம் துவரம் பருப்பு - 250 கிராம் கடலைப் பரு...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_1990.html
சிற்றுண்டிகள் அடை - ஒரு வகை
தேவைப்படும் பொருள்கள்
பச்சரிசி - 250 கிராம்
புழுங்கல் அரிசி - 250 கிராம்
துவரம் பருப்பு - 250 கிராம்
கடலைப் பருப்பு - 250 கிராம்
பயத்தம் பருப்பு - 50 கிராம்
உடைத்த உளுத்தம் பருப்பு - 50 கிராம்
மிளகாய் வற்றல் - 12 (அல்லது தேவைப்படி)
பச்சை மிளகாய் - 5 (அல்லது தேவைப்படி - தவிர்க்கவும் செய்யலாம்)
பெருங்காயம் - 1 மே. க.
கறிவேப்பிலை - 3 / 4 ஆர்க்குகள்
கொத்துமல்லித் தழை - 4 / 5 கைப்பிடிகள் (ஆய்ந்து கழுவியது)
உப்பு - 2 மே.க. (அல்லது தேவைப்படி)
பச்சரிசி, புழுங்கல் அரிசி ஆகிய இரண்டையும் தனித் தனியாகத் தண்ணீரில் களைந்த பின் ஊற வைக்கவும். துவரம் பருப்பு, கடலைப்பருப்பு ஆகிய இரண்டையும் ஒன்றாகச் சேர்த்துக் களைந்த பின் ஊற வைக்கவும். உளுத்தம் பருப்பு, பாசிப்பருப்பு ஆகிய இரண்டையும் ஒன்றாய்க் களைந்து ஊற வைக்கவும். இவை யாவும் நசுங்குகிற பதத்துக்கு நன்றாக ஊறியதும் முதலில் மிளகாய்வற்றலுடன் புழுங்கல் அரிசியை மின் அம்மியில் போட்டு நான்கைந்து முறை சுற்றிய பின் பச்சரிசியைஅதன் மீது போட்டு அரைக்கவும். மாவு நன்றாய் மசியக் கூடாது. கர கரவென்று இட்டிலி ரவைப் பதத்துக்கு அரைபட வேண்டும். இவ்வாறு அரைத்த மாவை வழித்து வைத்தபின் துவரம்பருப்பு, கடலைப்பருப்பு ஆகியவற்றையும் மின் அம்மியில் ஒன்றாய்ப் போட்டு முன்பு போலவே கரகரப்பாக அரைக்கவும். இவற்றை யெல்லாம் அரைக்கும் போது போதுமான தண்ணீர் விடவும். மாவுகள் கெட்டியாக இருக்க வேண்டும். தோசைக்கு அரைப்பது போல் அதிகமாய்த் தண்ணீர் விட்டு அரைக்கக் கூடாது.அரைத்து முடித்த மாவுகளைப் பெருங்காயம், உப்புப்பொடி, கறிவேப்பிலை,கொத்துமல்லி ஆகியவற்றுடன் நன்கு ஒன்றாய்க் கலக்கவும். இவ்வாறு தயாரித்த மாவை அரை அல்லது ஒரு மணி நேரம் போல் அப்படியே ஊற விடவும். பிறகு கெட்டியான தோசைக்கல்லில் நல்லெண்ணெய் ஊற்றி வார்த்து எடுக்கவும்.
Post a Comment