வீட்டு வைத்தியம், மருத்துவ டிப்ஸ்,

சுக்கை வாங்கி அதை நன்றாக வறுத்து பொடி செய்து பாலில் கருப்பட்டி போட்டு காபி, டீ சாப்பிடுவதை விட்டுவிட்டு, இதைச் சாப்பிடுவதால், நல்லா பசி எ...

சுக்கை வாங்கி அதை நன்றாக வறுத்து பொடி செய்து பாலில் கருப்பட்டி போட்டு காபி, டீ சாப்பிடுவதை விட்டுவிட்டு, இதைச் சாப்பிடுவதால், நல்லா பசி எடுக்கிறது. தூக்கம் வருது. சளி பிடிப்பது இல்லை. இப்படி ஏகப்பட்ட குணங்கள் சுக்கிற்கு இருக்கிறது. மண்டை குடைச்சல் தீர: நொச்சி இலையை, தலையணையாகப் பயன்படுத்த குணமாகும். உடல் அரிப்பு நீங்க: வண்ணி மரத்தின் இலையைப் பசும் பால் விட்டு அரைத்து, தினசரி 1 அவுன்ஸ் சாப்பிட குணமடையும். நன்றாக பசி எடுக்க: விளாம்பழத்தின் கொழுந்து இலைகளைக் கஷாயம் வைத்துக் குடிக்கவும். வயிற்றுக்கடுப்பு நீங்க: அரச இலை கொழுந்தை மோருடன் அரைத்து மோரில் கலந்து சாப்பிடலாம். வழுக்கை மறைய: வெங்காயம், செம்பருத்தி பூவுடன் சேர்த்து அரைத்து வழுக்கை மீது தடவி வர நல்ல பலன் கிடைக்கும். மூளை சுறுசுறுப்பாக இயங்க: வல்லாரை சாறில் ஊறவைத்து உலர்த்திய திப்பிலியைச் சாப்பிட குணமாகும். ஆஸ்துமா குணமாக: முசுமுசுக்கைச் சாறு நல்லெண்னையுடன் காய்ச்சி வாரம் ஒரு முறை தலை முழுகி வர பலன் உண்டு. நெறிகட்டிகள் சரியாக: தழுதாழை இலையைச் சாறு பிழிந்து அதை ஆலிவ் எண்ணையில் வதக்கிக் கட்ட குணமாகும். பல்வலி குணமாக: நந்தியாவட்டை வேரை வாயில் போட்டு மென்று துப்பினால் விரைவில் குணமாகும். வீக்கம், வலி போக: ஓமத்தை நீர்விட்டு அரைத்துக் களிபோல கிளறி இளஞ்சூட்டில் பற்று போட்டால் சரியாகிவிடும். உடற்சோர்வு சரியாக: கோதுமை மாவில் கஞ்சி வைத்து மாதவிடாய்க் காலங்களில் சாப்பிட கைமேல் பலன். நார்த்தங்காய்: இதை ஊறுகாய் செய்து சாப்பிட்டால் ஜீரண சக்தி அதிகரிக்கும், மலச்சிக்கலைப் போக்கும் சக்தி உண்டு. முருங்கைப் பிஞ்சு: இதை சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து இரண்டு வேளை வீதம், 3 நாட்கள் சாப்பிட குணமாகும். காரட், பீட்ரூட்: சாப்பிட்டு வந்தால், மஞ்சள் காமாலை குணமாகும். உடல் வளர்ச்சி நன்றாக இருக்கும். வெண்டைக்காய்: உணவில் அடிக்கடி சேர்த்துவர மூளை பலமடையும், கண்கள் குளிர்ச்சியடையும், எலும்பு பலப்படும். பேரிக்காய்: தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால், இதய படபடப்பு நின்றுவிடும். தக்காளி காய்: இதை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வர உடல் வீக்கம் குறையும், தோல் நோய் குணமாகும். சேப்பங்கிழங்கு: உண்ணும் உணவில் வாரம் இரு முறை சேர்த்துக் கொண்டால் நரம்புகள் பலப்படும். வெள்ளை பூசணி: மூன்று மாசம் தொடர்ந்து சாப்பிட்டு வர உடல் இளைத்தவர் பெருக்கலாம். சாறு எடுத்து 100 மி.லி. வீதம் தினமும் சாப்பிட புற்றுநோய் குணமாகும். நீர்கடுப்பு, நீர் எரிச்சல்: வெங்காயத்தை, பச்சையாக சாப்பிட்டு தண்ணீர் குடிக்க தீரும். உருளைக் கிழங்கு சாறு 1 அவுன்ஸ், எலுமிச்சை சாறு கொஞ்சம் சேர்த்து கண்ணிற்குக் கீழ் உள்ள கருவளையத்தில் போட்டு வந்தால் குணமாகும். வேப்பங் கொழுந்து கொஞ்சம், விரலி மஞ்சள் 1 துண்டு, சேர்த்து மைய அரைத்து முகத்தில் பூசி உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவி வந்தால், முகம் பளப்பளப்பாகிவிடும். காரட் ஜூஸ் தினமும் குடித்து வந்தால், கண் பார்வை நன்றாகத் தெரியும். முகம், உடம்பு அழகு பெறும். மருதாணி, பீட்ருட், எலுமிச்சை சாறு, தயிர் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து தலையில் தேய்த்தால், தலைமுடி கருகருவென அடர்த்தியாக வளரும். இளநரை முடி மறைந்துவிடும். உருளைக்கிழங்கை அரைத்து சாறு எடுத்து அதனுடன் பன்னீர் கலந்து முகத்திற்குத் தடவி வந்தால், முகம் பளப்பளப்பாகிவிடும். பாதங்களுக்கு ஆலிவ் ஆயில் போட்டு மசாஜ் பண்ணினால், பாதம் அழகாக இருக்கும். தலைமுடிக்கு வாரம் ஒரு முறை தயிர் தேய்த்து குளித்து வந்தால், முடி மினுமினுப்பாகிவிடும். கை, கால் நகங்களுக்கு ஆலிவ் எண்ணை தடவி வந்தால், நகம் உடையாமல் வளரும். பாகற்காய் சாறு சாப்பிட, சர்க்கரை வியாதி குணமாகும். வற்றல் செய்து வறுத்து உண்டு வர காமாலை, கல்லீரல் குறைபாடு நீங்கும். அவரைக்காய்: உணவில் அடிக்கடி சேர்த்து சமைத்து சாப்பிட, இரத்தம் சுத்தமாகும். இரத்த விருத்தி அதிகரிக்கும். ‘‘துளசி, தூதுவளை, கற்பூரவல்லி இவற்றை அலம்பி தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து கஷாயமாக்கி தேன் கலந்து குடித்தால் உடம்பு வலி, சளி, இருமல் எல்லாம் போயே போய்விடும். உடம்பிற்கு ஒரு புத்துணர்ச்சி வந்ததுபோல இருக்கும்’’ என்றார். வாரம் ஒரு முறை இதைக் குடித்தால் இருமல், சளி நம்மை அண்டவே அன்டாது

Related

மருத்துவ டிப்ஸ் 6113432210893134744

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item